6.22-இன்ச் டிஸ்பிளேவுடன் லெனோவோ கே6 என்ஜாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
லெனோவோ கே6 என்ஜாய் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.22-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.
லெனோவோ நிறுவனம் தற்சமயம் லெனோவோ கே6 என்ஜாய் என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவோ கே6 என்ஜாய் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு டூயல் ரியர் கேமரா அமைப்பு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே:
லெனோவோ கே6 என்ஜாய் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.22-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது
இந்த சாதனம்.

சிப்செட்:
இக்கருவி மீடியாடெக் ஹீலியோ பி22 ஆக்டோ-கோர் சபிசெட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 2.0ஜிகாஹெர்ட்ஸ் வசதியுடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
லெனோவோ கே6 என்ஜாய் ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி+5எம்பி என மூன்று ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு 5எம்பி செல்பீ கேமரா ஆதராவு, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம்,எல்இடி பிளாஸ் போன்ற பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:
லெனோவோ கே6 என்ஜாய் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை
சென்சார் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி-விலை:
இந்த ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ
ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் லெனோவோ கே6 என்ஜாய் ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.14,397-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications