டூயல் கேமரா & 5.65-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் லெனோவா கே520.!
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
தற்சமயம் லெனோவா கே520 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5.65-இன்ச் டிஸ்பிளே மற்றும் டூயல் ரியர் கேமரா வசதிகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
லெனோவா கே520 ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். சமீபத்தில் லெனோவா நிறுவனம் நவீன தொழில்நுட்பம் கொண்ட லேப்டாப் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த சாதனங்கள் அனைத்தும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் லெனோவா கே520 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

திரைவிகிதம்:
இக்கருவி 5.65-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு 18:9
என்ற திரைவிகிதம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

கேமரா:
லெனோவா கே520 ஸ்மார்ட்போன்; 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் கேமரா
மற்றும் எல்இடி பிளாஷ் இடம் இடம்பெற்றுள்ளது. மேலும் பிளாக், ரெட் மற்றும் சில்வர் வண்ண விருப்பங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவரும்.

ஆக்டோ-கோர்:
2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலியைப் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல், மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். கிராவிட்டி சென்சார், தொலைவு சென்சார், லைட் சென்சார் போன்றவை இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


3000எம்ஏஎச்:
லெனோவா கே520 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications