விரைவில் : ஆண்ட்ராய்டு ஓரியோ & 4ஜிபி ரேம் உடன் வெளிவரும் லெனோவா கே520.!
லெனோவா கே520 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் சிக்கியது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் 4ஜிபி ரேம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு லெனோவா கே8, கே8 நோட், கே8 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது, இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் மொபைல் சந்தையில் மிகப்பெரிய வெற்றியை தந்தது. அதைதொடர்ந்து இப்போது லெனோவா கே520 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

லெனோவா கே520 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் சிக்கியது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் 4ஜிபி ரேம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
லெனோவா கே520 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 2.02ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த லெனோவா கே520 ஸ்மார்ட்போன் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

நினைவூட்டும் வண்ணம், முன்னர் அறிமுகமான லெனோவா கே8 நோட் ஆனது ஒரு யூனிபாடி உலோக வடிவமைப்பு மற்றும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்ட (1080-1920 பிக்சல்கள்) 5.5 அங்குல முழு எச்டி காட்சி கொண்டுள்ளது.
லெனோவா கே8 நோட் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி மற்றும் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி என இரண்டு வகைகளில் வெளிவருகின்றன. இவற்றில்இ மைக்ரோ எஸ்.டி கார்டு பொருத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications