மிகவும் எதிர்பார்த்த லெனோவா கே5 நோட்(2018) & லெனோவா ஏ5 அறிமுகம்.!
லெனோவா ஏ5 ஸ்மார்ட்போன் மாடல் 5.45-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம்.
லெனோவா நிறுவனம் சியோமி நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, தற்சமயம் லெனோவா நிறுவனம் பட்ஜெட் விலையில் லெனோவா கே5 நோட்(2018) மற்றும் லெனோவா ஏ5 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆண்ட்ராய்டு ஒரியோ இயங்குதளம் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் லெனோவா கே5 நோட்(2018) மற்றும் லெனோவா ஏ5 ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லெனோவா கே5 நோட்(2018):
லெனோவா கே5 நோட்(2018) ஸ்மார்ட்போன் மாடல் 6-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720 x 1440
பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதி
மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது இந்த சாதனம்.

லெனோவா கே5 நோட்(2018):
லெனோவா கே5 நோட்(2018) ஸ்மார்ட்போனில் 16எம்பி+2எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. குறிப்பாக
3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 3750எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு
ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

லெனோவா கே5 நோட்(2018) விலை:
கருப்பு,தங்கம், நீலம் போன்ற நிறங்களில் லெனோவா கே5 நோட்(2018) ஸ்மார்ட்போன் கிடைக்கும். மேலும் இந்த சாதனத்தின்
இந்திய விலை மதிப்பு ரூ.8,400-ஆக உள்ளது.

லெனோவா ஏ5 :
லெனோவா ஏ5 ஸ்மார்ட்போன் மாடல் 5.45-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். குறிப்பாக குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6739 எஸ்ஒசி செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது இந்த சாதனம்.

லெனோவா ஏ5:
லெனோவா ஏ5 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. குறிப்பாக
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு
ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த சாதனத்தின் விலை மதிப்பு ரூ.6,300-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications