மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லெனோவா கே5 மற்றும் லெனோவா கே5 பிளே ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது லெனோவா நிறுவனம். மேலும் பல்வேறு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள். இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் டூயல் ரியர் கேமரா மற்றும் கைரேகை சென்சார் போன்ற வசதிகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லெனோவா கே5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை எல்ஃப் ப்ளூ, ஸ்பேஸ் சாம்பல், மற்றும் ஸ்டார் பிளாக் வண்ண வpருப்பங்களுடன் வெளிவரும். அதன்பின்பு லனோவா கே5 பிளே ஸ்மார்ட்போன் ஜாஸ் ப்ளூ, தங்கம் மற்றும் பங்க் பிளாக் போன்ற நிறங்களில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெனோவா கே5:
லெனோவா கே5 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1440 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
லெனோவா கே5 அம்சங்கள்:
லெனோவா கே5 பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6750வி செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 13எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இக்கருவி.
லெனோவா கே5 பேட்டரி:
லெனோவா கே5 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலைமதிப்பு ரூ.9,300-ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 10-ம் தேதி லெனோவா கே5 சாதனம் சீனாவில் விற்பனைக்கு வரும்.
லெனோவா கே5 பிளே:
லெனோவா கே5 பிளே ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1440பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
லெனோவா கே5 பிளே அம்சங்கள்:
லெனோவா கே5 பிளே பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸனாப்டிராகன் 430 செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இக்கருவி.
லெனோவா கே5 பிளே விலை:
லெனோவா கே5 பிளே ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை
மதிப்பு ரூ.7,200-ஆக உள்ளது. வரும் ஏப்ரல் 17-ம் தேதி லெனோவா கே5 பிளே சாதனம் சீனாவில் விற்பனைக்கு வரும்.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.