5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் லெனோவோ கே32டி.!
லெனோவோ கே32டி ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கருப்பு மற்றும் வெள்ளி வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் லெனோவோ கே32டி ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதன்படி 5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் லெனோவோ கே32டி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது லெனோவோ நிறுவனம்.

இந்த லெனோவோ கே32டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருவி 2ஜிபி/3ஜிபி ரேம் வித்தியாசத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த லெனோவோ கே32டி ஸ்மார்ட்போன் மாடல் மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

லெனோவோ கே32டி ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கருப்பு மற்றும் வெள்ளி வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் கிராவிட்டி சென்சார், தொலைவு சென்சார், லைட் சென்சார் போன்றவை இடம்பெற்றுள்ளன, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

லெனோவோ கே32டி ஸ்மார்ட்போனில் அட்டகாசமான டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய முன்புற கேமரா 8மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications