லெனோவா கே10 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?
லெனோவா நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனம் இன்று லெனோவா கே10 பிளஸ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் 30-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான டிஸ்பிளே
லெனோவா கே10 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.22-இன்ச் எச்டி பிளஸ் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மிரட்டலான கேமரா
லெனோவா கே10 பிளஸ் சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா,மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அசத்தலான சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளதுஇ பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

லெனோவா கே10 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4050எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த சவுண்ட் சிஸ்டம் ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட லெனோவா கே10 பிளஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.15,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications








