பிளிப்கார்ட்: விற்பனைக்கு வந்தது லெனோவா கே10 ஸ்மார்ட்போன்;: விலை?
லெனோவா நிறுவனத்தின் புதிய லெனோவா கே10 ஸ்மார்ட்போன் மாடல் இன்று பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட லெனோவா கே10 ஸ்மார்ட்போன் விலை ரூ.13,999-ஆக உள்ளது,பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட லெனோவா கே10 ஸ்மார்ட்போன் விலை ரூ.15,999-ஆக உள்ளது.
லெனோவா கே10 நோட் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.03-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லெனோவா கே10 நோட் சாதனத்தின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ்+8எம்பி டெலிலென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளது.
குறிப்பாக 4050எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18வாட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், வைஃபை, டூயல் சிம், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கடந்த 11-ம் தேதி இந்நிறுவனத்தின் லேனோவா இசெட்6 ப்ரோ, லெனோவா ஏ6 நோட் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட லேனோவா இசெட்6 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.33,999-ஆக உள்ளது. பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட லெனோவா ஏ6 நோட் விலை ரூ.7,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications