18 ஜிபி ரேம்.. மிரட்டலான தோற்றம்.. இதற்கு நிகர் எதுவுமே இல்லை.. பட்டையைக் கிளப்பும் Lenovo Legion 2 Duel..

|

லெனோவா இறுதியாக அதன் மிரட்டலான புதிய ஸ்மார்ட்போன் மாடலான லெஜியன் 2 டூயல் போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதுவரை நாம் கண்டிராத மிக உயர்ந்த சிறப்பம்சங்களுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனிற்கு நிகரான மற்றொரு ஸ்மார்ட்போன் எது என்பது இப்போது கேள்வியாக உள்ளது. உயர்தர புதிய அம்சங்களுடன் இந்த புதிய லெஜியன் 2 டூயல் போன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முழு விபரத்தை இந்த பதிவில் காணலாம்.

மிரட்டலான தோற்றம்

மிரட்டலான தோற்றம்

இந்த ஸ்மார்ட்போனின் முதல் மிரட்டலான அம்சமாக இதன் தோற்றம் உள்ளது. பார்ப்பவர் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் இதன் டிசைன் அமைந்துள்ளது. குறிப்பாக கேமர்களுக்கான சிறப்பு தோற்றத்துடன் இது வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 144 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி பேனல், சிறந்த ஹேப்டிக் அனுபவத்திற்காக இரண்டு எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் வைப்ரேஷன் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளது, இது டூயல் ஸ்டீரியோ முன்பக்க ஸ்பீக்கர்களுடன் வருகிறது. அதிகபட்சமாக இதில் 18 ஜிபி ரேம் வரை கொண்ட மாடல்கள் உள்ளது.

லெனோவா லெனோவா லெஜியன் 2 டூவல் மாடல்கள்

லெனோவா லெனோவா லெஜியன் 2 டூவல் மாடல்கள்

லெனோவா லெஜியன் 2 டூவல் ஸ்மார்ட்போன் அல்டிமேட் பிளாக் மற்றும் டைட்டானியம் ஒயிட் நிறத்தில் கிடைக்கிறது. இந்த புதிய லெனோவா லெஜியன் 2 டூவல் ஸ்மார்ட்போன் பல மாடல்களாக வருகிறது, அவற்றில் சில மாடல்கள் சில பகுதிகளுக்கு மட்டும் பிரத்தியேகமானவை என்று நிறுவனம் கூறியுள்ளது. எல்லா இடங்களிலும் இந்த அனைத்து மாடல்களும் கிடைக்காது என்று கூறப்படுகிறது, ஒவ்வொரு மாடலும் அதன் ஸ்டோரேஜ் விருப்பத்துடன் கூடிய விலை பட்டியலை கீழே இணைத்துள்ளோம்.

செவ்வாய் கிரகத்தில் எப்படி அது வந்துச்சு.,அதுக்கு வாய்ப்பே இல்ல-பெரும் விவாதத்திற்கு நாசா வைத்த முற்றுப்புள்ளிசெவ்வாய் கிரகத்தில் எப்படி அது வந்துச்சு.,அதுக்கு வாய்ப்பே இல்ல-பெரும் விவாதத்திற்கு நாசா வைத்த முற்றுப்புள்ளி

Lenovo Legion 2 விலை

Lenovo Legion 2 விலை

 • 8 ஜிபி ரேம் + 128 ஜிபி = ¥ 3699 (தோராயமாக ரூ .42,100)
 • 12 ஜிபி ரேம் + 128 ஜிபி = ¥ 4099 (தோராயமாக ரூ .46,700)
 • 12 ஜிபி ரேம் + 256 ஜிபி = € 799 (தோராயமாக ரூ .70,000), ¥ 4399 (தோராயமாக ரூ .50,100)
 • 16 ஜிபி ரேம் + 512 ஜிபி = € 999 (தோராயமாக ரூ .88,200), ¥ 5299 (தோராயமாக ரூ .60,400)
 • 18 ஜிபி ரேம் + 512 ஜிபி = ¥ 5999 (தோராயமாக ரூ .68,400)
 • அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் கிடைப்பது "தீர்மானிக்கப்பட வேண்டியது" என்றாலும் கூட, மே முதல் ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளில் வாங்குவதற்கு இது கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  லெனோவா லெஜியன் 2 டூவல் சிறப்பம்சம்

  லெனோவா லெஜியன் 2 டூவல் சிறப்பம்சம்

  இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.92 இன்ச் சாம்சங் இ4 அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 20.5: 9 விகித 2460 x 1080 தீர்மானம் கொண்ட, 1300-நைட் உச்ச பிரகாசம் உடைய, 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் உடன் கூடிய 720 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் விகிதம் கொண்ட டிஸ்பிளேவுடன் வருகிறது. காட்சி பிக்சல்வொர்க்ஸ் ஐ 6 சிப்செட் மூலம் 8 பிட் எச்டிஆர் டிஸ்ப்ளேவை ஆதரிக்கிறது. கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பும் இதில் உள்ளது.

  OnePlus 9 Pro போனில் இப்படி ஒரு பிரச்சனையா? தீர்வுக்கு நிறுவனம் சொன்ன பதில் என்ன தெரியுமா?OnePlus 9 Pro போனில் இப்படி ஒரு பிரச்சனையா? தீர்வுக்கு நிறுவனம் சொன்ன பதில் என்ன தெரியுமா?

  பாப்-அப் ஆகும் செல்பி கேமரா

  பாப்-அப் ஆகும் செல்பி கேமரா

  இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 18 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 512 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போன் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது ஆம்னிவிஷன் 64 எம்.பி எஃப் / 1.9 1.0 µ மீ முதன்மை சென்சார் உடன் 16 எம்.பி எஃப் / 2.2 கொண்ட 123 ° அல்ட்ராவைடு ஆங்கிள் கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் இருந்து பாப்-அப் ஆகும் 44 எம்.பி முன்பக்க கேமராவை கொண்டுள்ளது.

  5,500 எம்ஏஎச் பேட்டரி டூயல் சார்ஜிங் போர்ட்

  5,500 எம்ஏஎச் பேட்டரி டூயல் சார்ஜிங் போர்ட்

  லெஜியன் 2 டூவல் 5,500 எம்ஏஎச் பேட்டரி மூலம் தலா 2750 எம்ஏஎச் இரண்டு கலங்களாகப் பிரிக்கப்படுகிறது. இரண்டு பேட்டரிகளைப் பிரிப்பது லெனோவாவை 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவிலும் இரண்டு யூ.எஸ்.பி-சி போர்ட்டுகளிலும் வைக்க அனுமதிக்கிறது. நீங்கள் இரண்டு போர்ட்களுடனும் ஒரே நேரத்தில் இணைக்க முடியும், அது ஸ்மார்ட்போனை 90W இல் சார்ஜ் செய்யும், அல்லது நீங்கள் ஒற்றை போர்டில் பயன்படுத்தினால், இந்த ஸ்மார்ட்போன் 45W சார்ஜிங் முறையில் போனை சார்ஜ் செய்கிறது.

  டூயல்-டர்போ பேன் ஆக்டிவ் கூலிங் சிஸ்டம்

  டூயல்-டர்போ பேன் ஆக்டிவ் கூலிங் சிஸ்டம்

  இந்த ஸ்மார்ட்போனில் டூயல்-டர்போ பேன் ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் என்ற அமைப்பு உள்ளது. இது 29 பிளேடுகள் கொண்ட 12,500 ஆர்.பி.எம் வேகம் கொண்ட பேன் ஆகும். இது ஸ்மார்ட்போனின் வெப்பக் காற்றை வெளியேற்றும் வெளியீட்டு விசிறியாக செயல்படுகிறது. இதன் ஆர்.பி.எம் 15,000 ஆக உள்ளது. லெனோவா கூறுகையில், இது 50,000 மணிநேரம் வரை ஆயுள் கொண்டது, அதாவது இது கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குச் செயல்படக்கூடியது. இதில் நான்கு அல்ட்ரா சோனிக் ஷோல்டர் கீஸ்-கள் வழங்கப்பட்டுள்ளது. டூயல் போர்ஸ் டச் சென்சார் மற்றும் டூயல் கேப்ஸிடன்ஸ் கீ கொடுக்கப்பட்டுள்ளது..

  கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!

  பிற அம்சங்கள்

  பிற அம்சங்கள்

  டூயல் ஃபிரண்ட் பேசிங் மேக்னெட்டிக் ஸ்பீக்கர்கள் கொண்ட டால்பி அட்மோஸ் ஆதரவுடன் டியூன் செய்யப்படுகின்றது. இது ஸ்மார்ட் ஆம்பிளிஃபையர் உடன் வருகிறது. இணைப்பிற்காக, இந்த ஸ்மார்ட்போனில் வைஃபை 6, சார்ஜிங் மற்றும் டிஸ்ப்ளே போர்ட் ஆதரவுக்கு ஒரு யூ.எஸ்.பி-சி 3.1 போர்ட், ஒரு யூ.எஸ்.பி-சி பவர் பின், புளூடூத் 5.2, என்.எஃப்.சி மற்றும் 5 ஜி ஆகிய அம்சங்கள் இதில் உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lenovo has launched its latest gaming smartphone called Legion Phone Duel 2 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X