Home
Mobile

அட்ராசக்கை வருகிறது 5ஜி ஸ்மார்ட்போன்.!

அடுத்த தலைமுறைக்கான 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய ஆர்வர் நம்மை எதிர்பார்ப்புடன் காத்திருக்க செய்தது. காத்திருந்தது போதும் இன்று உங்கள் செவிகளுக்கு விருந்தளிக்கும் விதமாக வெளிவந்துள்ளது இச்செய்தி.

By Sharath
அட்ராசக்கை வருகிறது 5ஜி ஸ்மார்ட்போன்.!

அடுத்த தலைமுறைக்கான 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய ஆர்வரம் நம்மை எதிர்பார்ப்புடன் காத்திருக்க செய்தது. காத்திருந்தது போதும் இன்று உங்கள் செவிகளுக்கு விருந்தளிக்கும் விதமாக வெளிவந்துள்ளது இச்செய்தி. பல முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் 5ஜி போன்களைச் சந்தைக்கு கொண்டு வருவதற்கு மிகத் தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கிறது.

இப்பொழுது லெனோவா நிறுவனத்தின் துணை ப்ரெசிடெண்ட் சாங் செங் உறுதியாக லெனோவா நிறுவனம் தான் முதல் நிறுவனமாக இந்த ஆண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை சந்தைக்கு அறிமுகம் செய்யுமென்று உறுதி அளித்துள்ளார்.

லெனோவா வின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்

லெனோவா வின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்

லெனோவா வின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அட்டகாசமான புதிய ஸ்னாப்டிராகன் 855 SOC யுடன் சந்தையில் களமிறக்கப்படும் என்று கூறியுள்ளார். இதே போல் ரோலண்ட் குவாண்டட் இன் குறிப்பின் படி, புதிய குவல்காம் சிப் தீவிர தயாரிப்பில் ஜூன் தொடக்கத்தில் இருந்தே தொடங்கிவிட்டதாம். இந்த புதிய ஸ்னாப்டிராகன் 855 சிப் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2019 தொடக்கத்தில் சந்தைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

லெனோவா Z5

லெனோவா Z5

இருப்பினும் செங் அனைத்துச் செய்திகளையும் மிகைப்படுத்திக் கூறுவதில் கெட்டிக்காரர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. லெனோவா Z5 ஸ்மார்ட்போன் டீஸர் வெளிவந்த பொழுது செங், லெனோவா Z5 இல் நாட்ச் இல்லாத டிஸ்பிலே மற்றும் ராட்சஸ பேட்டரியுடன் வருமென்று கூறினார், ஆனால் லெனோவா Z5 சந்தைக்கு வந்த பொழுது நாட்ச் டிஸ்பிலே மற்றும் 3300 எம்எஎச் பேட்டரி பேக்கப்புடன் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.

5ஜி போன்

5ஜி போன்

லெனோவா நிறுவனத்தைப் போன்றே, 5 ஜி போன்களைச் சந்தைக்கு அறிமுகப்படுத்த மற்ற முன்னணி நிறுவனங்களான ஒப்போ, ஹவாய் மற்றும் ஒன்ப்ளஸ் தீவிரம்காட்டியுள்ளது. எனவே 2019 இல் நம் கைகளில் 5ஜி போன் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

5ஜி ஸ்மார்ட்போன் 2019

5ஜி ஸ்மார்ட்போன் 2019

2019 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என்று ஹவாய் தெரிவித்துள்ளது. அதேபோன்று ஒன்ப்ளஸ், அதன் 5ஜி ஸ்மார்ட்போன்களை 2019 இல் அறிமுகம் செய்யுமென்று உறுதியளித்துள்ளது. இத்துடன்சாம்சங் கேலக்ஸி எஸ்10 இல் 5ஜி இணக்கம் இருக்குமென்று வதந்திகள் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Lenovo to Be First to Launch 5G Smartphone With Snapdragon 855 SoC, Executive Claims : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X