13எம்பி கேமரவுடன் அட்டகாசமான Lenovo A7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

லெனோவா நிறுவனம் புதிய லெனோவா ஏ7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான தகவலைப் பார்ப்போம்

லெனோவா ஏ7 ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய முழுமையான தகவலைப் பார்ப்போம்.

720 x 1560 பிக்சல் திர்மானம்

லெனோவா ஏ7 ஸ்மார்ட்போன் மாடல் 6.07-இன்ச் வாட்டர்டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 720 x 1560பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் Unisoc எஸ்சி9863ஏ பிராசஸர் வசதியை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஆப்பிள் டிவி பிளஸ் நிகழ்ச்சிகள் இலவசம்: பார்க்க வழிமுறைகள்.!ஆப்பிள் டிவி பிளஸ் நிகழ்ச்சிகள் இலவசம்: பார்க்க வழிமுறைகள்.!

 ஏ7 ஸ்மார்ட்போன்

லெனோவா ஏ7 ஸ்மார்ட்போன் மாடல் 2ஜிபி மெமரி மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை ரீடர் உள்ளது.

மேலும் 5எம்பி செல்பீ கேமரா

லெனோவா ஏ7 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ்+ 2எம்பி செகன்டரி சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு வசதி என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஏ7 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச்

லெனோவா ஏ7 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது 10 மணிநேர ஆடியோ பிளேபேக்,57 டால்க் டைம்,416 மணிநேர பேக்கப் நேரம் மற்றும் 84 மணிநேர ம்யூசிக் பேக்ரவுண்ட் ஆகியவைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுளளது

இணைப்பு ஆதரவுகளை

4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி,புளூடூத், ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் க்ளோனாஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Samsung Galaxy A21: சாம்சங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!Samsung Galaxy A21: சாம்சங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

Best Mobiles in India

English summary
Lenovo A7 launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X