Home
Mobile

அட்டகாசமான வடிவமைப்பில் புதிய லெனோவா ஸ்மார்ட்போன்!

By Super

அட்டகாசமான வடிவமைப்பில் புதிய லெனோவா ஸ்மார்ட்போன்!
எல்கட்ரானிக் சாதன பொருட்களுக்கு பேர் போனது லோனோவோ நிறுவனம். சிறந்த தொழில் நுட்பங்களை கொடுக்கும் இந்த லெனோவோ புதிய ஏ-60 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஏ-60 ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் திரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ஆதலால் வேண்டிய தகவல்களை சிறந்த முறையில் பெறலாம். ஏ-60 ஸ்மார்ட்போன் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொண்டது. இதில் கேமரா 3.2 பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மொபைலில் அழகான புகைப்படங்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும் என்பது பலரது ஆசை.

அந்த ஆசை நிச்சயம் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும். இதில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் 320 X 480 பிக்ஸல் துல்லியமும் கிடைக்கும். இதன் 650 மெகாஹெர்ட்ஸ்

பிராசஸர் மூலம் சிறந்த வேகத்தினை கொடுக்கும். 2ஜிபி ரேம் வசதி உள்ளது. வைபை தொழில் நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் இணைப்பு வசதியை பெற முடியும். யூஎஸ்பி 2.0 போர்ட் வசதி உள்ளதால் தகவல்களை எளிதாக பரிமாற்றம் செய்யலாம்.

மல்டி டச் தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 3.5ஜி எச்எஸ்டிபிஏ தொழில் நுட்பத்தையும் வழங்கும். இதனால் 7.2 எம்பிபிஎஸ் வேகத்தினையும் பெறலாம். இதில் ஸ்மூதர் சேட்டிலைட் நேவிகேஷன் தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஆற்றல் வாய்ந்த பேட்டரி சிறந்த பேக்கப்பை கொடுப்பதால் டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமினை வழங்கும். வைட், பிளாக், ப்ளூ, பர்பில் போன்ற கண்கவரும் வண்ணங்களில் இந்த ஏ-60 ஸ்மார்ட்போனை பெற முடியும்.

இந்த லெனோவோ ஏ-60 ஸ்மார்ட்போனின் விலை அறிவிக்கப்படவில்லை. தொழில் நுட்பத்திற்கு ஏற்ற கவர்ச்சிகரமான விலை கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X