விரைவில் களமிறங்கும் லெஜியன் போன் டூயல்: லெனோவா அடுத்த படைப்பு!

|

லெனோவா லெஜியன் டூயல் ஸ்மார்ட்போன் லெனோவோ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் லெனோவா விரைவில் லெஜியன் டூயல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என தெரிவித்துள்ளது.

லெனோவா புதிய கேமிங் ஸ்மார்ட்போன்

லெனோவா புதிய கேமிங் ஸ்மார்ட்போன்

லெனோவா புதிய கேமிங் ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் விலை மற்றும் எப்போது கிடைக்கும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் லெனோவா இணையதளத்தில் புதிய லெஜியன் டூயல் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என பட்டியலிடப்பட்டுள்ளது.

லெனோவா லெஜியன் முக்கிய அம்சங்கள்

லெனோவா லெஜியன் முக்கிய அம்சங்கள்

லெனோவா லெஜியன் ஸ்மார்ட்போன் டூயல் ஸ்மார்ட்போன் கிடைக்கும் விவரங்கள் அல்லது விலை குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் கிடைத்துள்ளது. இது கேமிங் ஸ்மார்ட்போனாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லெஜியன் ஸ்மார்ட்போனை கிடைக்கும் தன்மை குறித்த தகவல்

லெஜியன் ஸ்மார்ட்போனை கிடைக்கும் தன்மை குறித்த தகவல்

அதோடு ஆசிய பசிபிக், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் லெனோவா லெஜியன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதை நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கிடைக்கும் தன்மை குறித்த தகவல் இல்லை.

உஷார்: தலையணைக்கு கீழ் வைத்திருந்த போன் வெடித்து தீப்பற்றியது- தூக்கத்தில் நேர்ந்த சோகம்!உஷார்: தலையணைக்கு கீழ் வைத்திருந்த போன் வெடித்து தீப்பற்றியது- தூக்கத்தில் நேர்ந்த சோகம்!

லெனோவா லெஜியன் டூயல் ஸ்மார்ட்போன்: அம்சங்கள்

லெனோவா லெஜியன் டூயல் ஸ்மார்ட்போன்: அம்சங்கள்

லெனோவா லெஜியன் ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 10 இசட்யூஐ12 லெஜியன் ஓஸ் மூலம் இயக்கப்படும் என தெரிகிறது. இது 6.65 இன்ச் (1,080x2,340 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்ப்ளே ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் 144 புதுப்பிப்பு வீதக் காட்சியுடன் வரும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ளஸ் எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படும் என தெரிகிறது.

5,000 mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங்

5,000 mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங்

லெஜியன் ஸ்மார்ட்போன் டூயல் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 16 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பாப்-அப் அம்சத்துடனான 20 மெகாபிக்சல் செல்பி கேமரா இதில் இருக்கிறது. லெனோவா லெஜியன் ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தோடு வரும் என கூறப்படுகிறது.

லெஜியன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

லெஜியன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

இந்த ஸ்மார்ட்போனை 10 நிமிடத்தில் 50% வரை பேட்டரியை சார்ஜ் செய்ய உங்களை அனுமதிக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன் முழுமையாக சார்ஜ் செய்ய 30 நிமிடங்கள் ஆகும். இணைப்பு ஆதரவுகளாக 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.0 மற்றும் இரண்டு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள் அடங்கும். பாதுகாப்பு அம்சங்களுக்கு லெனோவா லெஜியன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lenova Legion Phone Duel May Launch Soon in India: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X