ரேம் பவரே 16ஜிபி., அப்போ மிச்சமெல்லாம் எப்படி இருக்கும்: லெனோவா லெஜியன் 2 ப்ரோ தகவல்!

|

லெனோவா தரப்பில் விரைவில் வெளியாக இருக்கும் சாதனம் கேமிங் ஸ்மார்ட்போனாக இருக்கும் எனவும் அது லெனோவா லெஜியனின் வாரிசாக இருக்கும் எனவும் கீக்பெஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ரேம் பவரே 16ஜிபி: லெனோவா லெஜியன் 2 ப்ரோ தகவல்!

லெனோவா நிறுவனம் அதன் கேமிங் ஸ்மார்ட்போனின் இரண்டாவது ஜெனரேஷன் மாடல் லெனோவா லெஜியன் 2 ப்ரோ என அழைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு வெளியான லெனோவா லெஜியனின் வாரிசாக இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனில் உயர்ரக அம்சங்கள் சிலவற்றை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த வரவிருக்கும் ஸ்மார்ட்போன் லீஜியன் ப்ரோ 2 சாதனமாக இருக்கும் எனவும் இதன் மாடல் எண் லெனோவா எல் 70081 கொண்ட சாதனமாக இருக்கும் எனவும் கீக்பெஞ்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 மூலம் இயக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு இது 16ஜிபி ரேம் வசதியுடன் வரும் என கூறப்படுகிறது.

ரேம் பவரே 16ஜிபி: லெனோவா லெஜியன் 2 ப்ரோ தகவல்!

சிறந்த செயல்திறனை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருப்பதால் இதில் புதுப்பிக்கப்பட்ட குளிரூட்டும் ஃபேன் முறை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று மற்றும் மல்டி கோர் இயக்கமுறைமையில் இருக்கும் இந்த சாதனம் 1,129 மற்றும் 3,763 புள்ளிகளை கொண்டிருக்கும் எனவும் கீக்பெஞ்சில் காணப்பட்ட அதிக மதிப்பெண்களை கொண்ட சாதனம் இதுவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த பட்டியலின்படி, ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இல் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது 144 ஹெர்ட்ஸ் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, யூஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் மற்றும் எல்பிடிடிஆர் 5 ரேம் ஆதரவு ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது.

இதேபோல் நுபியா நிறுவனம் தனது ரெட் மேஜிக் 6 சீரிஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ப்ரோ வேரியண்டில் இதுவரை கண்டிராத மிக உயர்ந்த ரேம் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் பிரமிக்கத்தக்க உயர்ரக ரேம் கொண்டுள்ளதாகவும் 512 ஜிபி சேமிப்பகத்துடன் இது வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரேம் பவரே 16ஜிபி: லெனோவா லெஜியன் 2 ப்ரோ தகவல்!

ரெட் மேஜிக் 6 ப்ரோ சாதனம் 6.8 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. 165 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் இந்தசாதனம் வருகிறது. இது புதுப்பிப்பு வீத ஆதரிக்கும் கேம்களை விளையாடும்போது 165 ஹெர்ட்ஸை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 செயலி மற்றும் அட்ரினோ 660 அதிவேக குளிரூட்டும் விசிறி, தெர்மல் ஜெல் ஆகியவைகளுடன் வரும் என கூறப்படுகிறது.

லெனோவா லெஜியன் 5 கேமிங் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. லெனோவா லெஜியன் 5 Phantom Black வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.75,990 ஆக நிர்ணயிக்கப்பட்டது. லெனோவா லெஜியன் 5 சுமார் 2.3 கிலோ எடையுள்ளதாகும். இந்த லேப்டாப் இன்று (டிசம்பர் 1) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லேப்டாப் ஆறு அல்ட்ரா-ரெஸ்பான்சிவ் கோர்களுடன் AMD ரைசன்5 4600 எச் மொபைல் செயலி ஆதரவுடன் இயக்கப்படுகிறது.

லெனோவா லெஜியன் 5 லேப்டாப் 120 ஹெ்ட்ஸ் டிஸ்ப்ளே புதிப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இதில் 15.6 இன்ச் ஐபிஎஸ் 1080 பிக்சல் டிஸ்ப்ளே இருக்கிறது. மேலும் என்விஐடிஐஏ ஜிஇ ஃபோர்ஸ் ஜிடிஎஸ்டிஎம் 1650டிஐ தனித்துவ கிராபிக்ஸ் கட்டமைப்பில் இயங்குகிறது. பேட்டரி சேமிப்பை பொருத்தவரை சக்தி வாய்ந்த பேட்டரி இதில் இருக்கிறது. ஹைப்ரிட் பயன்முறையை பயன்படுத்தும்போதும் எட்டு மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Lenova Legion 2 Pro May Launching With 16 GB RAM: GeekBench information

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X