லெனோவா கே13 சிறப்பம்சங்கள் லீக்: கம்மி விலையில் நிரம்பிய அம்சங்கள்!
லெனோவா கே13 ஸ்மார்ட்போன்கள் குறித்த முக்கிய விவரக்குறிப்புகள் ரெண்டர்களில் தோன்றியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட லெனோவா கே12 ஸ்மார்ட்போனின் வாரிசாக லெனோவா கே13 ஸ்மார்ட்போன் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரிவில் இருக்கும் எனவும் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே மற்றும் பல அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிப்ஸ்டர் சுதான்ஷு உடன் இணைந்த 91 மொபைல்ஸ் இந்த கசிவு தகவலை வெளியிட்டுள்ளது. வரவிருக்கும் லெனோவா கே13 ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்த சாதனம் ஃபிளாஷ் உள்ளிட்ட இரண்டு கேமரா அமைப்புகளை கொண்டிருக்கிறது.
பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் இருக்கிறது. கூகுள் அசிஸ்டென்ட்டுக்கு என பிரத்யேக பட்டன்கள், கன்ட்ரோல் பட்டன்கள் இருக்கிறது. சாதனத்தின் முன்பக்கம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் உச்சநிலை இருக்கிறது.
லெனோவா கே13 சிறப்பம்சங்கள்
லெனோவா கே13 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, பின்புறத்தில் பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை சென்சார் இருக்கிறது. லெனோவா கே13 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் செயலி மூலம் இயக்கப்படும்.
2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியுடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. பின்புறத்தில் 13 எம்பி கேமரா, 2 எம்பி கேமரா என இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 5 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 10 இயக்க ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி, யூஎஸ்பி சார்ஜிங் ஆதரவு உள்ளிட்டவை இயக்குகிறது.


Click it and Unblock the Notifications