குறைந்த விலையில் நிறைந்த அம்சங்களோடு லெனோவா கே 12 நோட் அறிமுகம்!
லெனோவா கே 12 நோட் சவுதி அரேபியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்பு, ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஓசி செயலி, பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புற கைரேகை சென்சார் உள்ளிட்ட ஆதரவுகளோடு வருகிறது.

லெனோவா கே 12 நோட்: விலை
லெனோவா கே 12 நோட் சவுதி அரேபியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை SAR599 (தோராயமாக ரூ.11,900). ஸ்மார்ட்போன் ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் சபையர் ப்ளூ என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இது தற்போது சவுதி அரேபியாவின் ஆக்சியம் டெலிகாம் வலைதளம் மூலம் விற்பனைக்கு கிடைக்கிறது.

லெனோவா கே 12 நோட்: அம்சங்கள்
லெனோவா கே 12 நோட் இரட்டை நானோ சிம் உடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமையில் இது இயங்குகிறது. 6.5 அங்குல எச்டி + (720x1,600 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஎஃப்டி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 20: 9 விகித அளவையும், 87% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தையும் கொண்டுள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 662 SoC மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

லெனோவா கே 12 நோட்: கேமரா
லெனோவா கே 12 நோட் ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் இரண்டாம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா செல்பி வசதிக்கென பொருத்தப்பட்டுள்ளது.

5,000 mAh பேட்டரி
லெனோவா கே 12 நோட் 128 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இணைப்பு விருப்பங்களில் 4 ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.0மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். லெனோவா ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரியுடன் வருகிறது, இது 20W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications