புதிய டியூவல் சிம் மொபைல்கள்: லெமன் களமிறக்குகிறது

Posted By: Staff

புதிய டியூவல் சிம் மொபைல்கள்: லெமன் களமிறக்குகிறது
லெமன் நிறுவனம் சில புதிய மலிவு விலை மொபைல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றை நாம் தலைசிறந்த போன்கள் என்றே அழைக்கலாம். அந்த அளவிற்கு அவற்றின் செயல்பாடு மிக அம்சமாக உள்ளன. அதிகமான வாடிக்கையாளர்கள் தமது படைப்பகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதே தமது லட்சியம் என்கின்றனர் லெமன் நிறுவனத்தார்.

தற்போது அவர்கள் லெமன் டி-359 என்ற புதிய இரட்டை சிம் ஜிஎஸ்எம் மொபைலை விரைவில் அறிமுகம் செய்கின்ரனர்.

இந்த புதிய மொபைலில் 8ஜிபி டேட்டா சேமிப்பு உள்ளது. இதன் டிஎப்டி டிஸ்ப்ளே 2.4 இன்ச் அளவுடன் 320 X 240 பிக்ஸல் ரிசலூசனைக் கொண்டுள்ளதால் இதன் டிஸ்ப்ளே மிக வண்ணமயமாக இருக்கும்.

டி-359ன் கேமரா 1.3 மெகா ப்க்ஸல் ஆகும். மேலும் இதில் படங்களை எடிட் செய்யும் வசதியும் உள்ளது. இதன் மீடியா ப்ளேயர் மூலம் ஏராளமான வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை இயக்கலாம். மேலும் 8ஜிபி சேமிப்பு வசதி உள்ளதால் இந்த மொபைல் ஒரு சிறந்த மீடியா ப்ளேயராக செயல்படும்.

டி-359ல் எல்இடி டார்ச் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்தய வாடிக்கையாளர்கள் இந்த எல்இடி டார்ச்சை பெரிதும் விரும்புவர். மேலும் இதில் ஆட்டோகால் ரிக்கார்டர் உள்ளதால் தானாகவே இது தாக்கில்ட் ஆன் மற்றும் ஆப் ஆகிக் கொள்ளும். மேலும் இன்பில்ட் மொபைல் ட்ராக்கர் உள்ளதால் இந்த மொபைல் தொலைந்தாலும் இதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

டி-359ல் சிறந்த ப்ளூடூத் வசதி உள்ளதால் தகவல் பரிமாற்றம் மிக அருமையாக இருக்கும். இதில் வைபை வசதி இல்லை. இருந்தாலும் இதன் ஜிபிஆர்எஸ்/டபுள்யுஎபி வசதி மூலம் நெட்வொர்க் வெப் அக்ஸஸை விரைவாக செய்ய இயலும். மேலும் இந்த புதிய மொபைல் 3.5எம்எம் ஆடியோ ஜாக்கையும் பெற்றுள்ளது இதன் அடுத்த சிறப்பாகும்.

டி-359ன் சிறந்த மின் திறனை கொண்டுள்ளது. அதிக மணி நேரம் பேசக்கூடிய பேக்கப்பையும் நீண்ட ஆயுளைக் கொண்ட ஸ்டான்டர்ட் பேக்கப்பையும் கொண்டுள்ளது. இன்னும் இதன் விலை விவரம் வரவில்லை என்றாலும் கண்டிப்பாக குறைந்த விலையில் வரும் என்று நம்பலாம். இதுவே இந்த மொபைலின் முக்கிய சிறப்பம்சமாகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot