முதல் போனே இப்படியா? 1' இன்ச் அளவில் கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது தான்..

|

லைக்கா (Leica) நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போன் மாடலான லைக்கா லெய்ட்ஸ் போன் 1 (Leica Leitz Phone 1) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்துவதன் மூலம் நெரிசலான ஸ்மார்ட்போன் பிரிவில் முத்தம் முறையை உள் நுழைகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையானது நிறுவனத்தின் நிபுணத்துவம் அளிக்கப்பட்ட கேமரா பயன்பாட்டை குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 20 மெகாபிக்சல் கொண்ட 1 இன்ச் அளவு கொண்ட சென்சாரை 19 மிமீ ஈக்குவளென்ட் போகஸ் லெந்த் உடன் வழங்கியுள்ளது.

1 இன்ச் கேமரா சென்சார் உடன் லைக்கா லெய்ட்ஸ் போன் 1

1 இன்ச் கேமரா சென்சார் உடன் லைக்கா லெய்ட்ஸ் போன் 1

கூடுதல் பாதுகாப்பிற்காகப் பின்புறத்தில் வட்ட கேமரா அமைப்பிற்கான காந்த லென்ஸ் கேப் வழங்கப்பட்டுள்ளது. லைக்கா லெய்ட்ஸ் போன் 1 ஒரு பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. இந்த லைக்கா லெய்ட்ஸ் போன் 1 ஸ்மார்ட்போன் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது சமீபத்திய சிப்செட் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் என்று குறிப்பிடப்படுகிறது.

லைக்கா லெய்ட்ஸ் போன் 1 விலை மற்றும் விற்பனை

லைக்கா லெய்ட்ஸ் போன் 1 விலை மற்றும் விற்பனை

லைக்கா லெய்ட்ஸ் போன் 1 என அழைக்கப்படும் முதல் லைக்கா தொலைப்பேசி ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை JPY 187,920 ஆகும். இது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 1,25,800 ஆகும். இது சாப்ட் பேங்க் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லைக்கா லெய்ட்ஸ் போன் 1 ஸ்மார்ட்போனானது ஒற்றை லைக்கா சில்வர் கலர் விருப்பத்தில் மட்டும் கிடைக்கிறது. ஜப்பானில் ஜூலை மாதத்தில் இது விற்பனைக்கு வருகிறது.

எல்லாமே வீட்டில் இருந்து- புதிய ரேஷன் கார்ட் விண்ணப்பம், பெயர் இணைப்பு, நீக்கம் செய்வது எப்படி?எல்லாமே வீட்டில் இருந்து- புதிய ரேஷன் கார்ட் விண்ணப்பம், பெயர் இணைப்பு, நீக்கம் செய்வது எப்படி?

லைக்கா லெய்ட்ஸ் போன் 1 சிறப்பம்சம்

லைக்கா லெய்ட்ஸ் போன் 1 சிறப்பம்சம்

லைக்கா லெய்ட்ஸ் போன் 1 ஸ்மார்ட்போன் புதிய ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது. இது 6.6 இன்ச் அளவு கொண்ட UXGA பிளஸ் 2,730 x 1,260 பிக்சல்கள் கொண்ட OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் உடன் 256GB ஸ்டோரேஜ் இதில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவாக்க ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை 1TB வரை பயன்படுத்துகிறது.

முதல் முறையாக 1 இன்ச் சென்சார்

முதல் முறையாக 1 இன்ச் சென்சார்

1 இன்ச் கேமரா சென்சார் அமர்ந்திருக்கும் பின்புறத்தில் முக்கிய சிறப்பம்சம் உள்ளது. லைக்கா லெய்ட்ஸ் போன் 1 இல் 20 மெகாபிக்சல் கொண்ட 1 இன்ச் சென்சார் உள்ளது, இது எஃப் / 1.9 துளை மற்றும் 19 மிமீ ஈக்குவளென்ட் போகஸ் லெந்த்தை கொண்டது. கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் படங்களை எடுக்க பின்புறத்தில் ஒரே வண்ணமுடைய பயன்முறை உள்ளது. முன்பக்கத்தில், தொலைபேசியில் 12.6 மெகாபிக்சல் கொம்டா செல்பி சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இது பன்ச் ஹோல் டிஸ்பிளேவில் பொருத்தப்பட்டுள்ளது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

லைக்கா லெய்ட்ஸ் போன் 1 ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது மற்றும் இதில் கைரேகை சென்சார் உடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், வைஃபை 802.11 ஆக்ஸ், புளூடூத் v5.2, வோல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆகியவை இதில் அடங்கும். லைக்கா லெய்ட்ஸ் போன் 1 ஸ்மார்ட்போனானது சுமார் 74x162x9.5 மிமீ அளவிடும் மற்றும் 212 கிராம் எடையை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Leica Leitz Phone 1 With 1-Inch Camera Sensor Price and Specification : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X