திரும்ப வந்துட்டேனு சொல்லு! லைக்கா கேமரா உடன் அறிமுகமான Xiaomi 13.. இதைவிட பெஸ்ட் போன் வாய்ப்பில்ல.!

|

Xiaomi 13 சீரிஸ் ஆனது ரியர் டிரிபிள் கேமராக்கள், 32 எம்பி செல்பி கேமரா, சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி உள்ளிட்ட பல மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. நீங்கள் புதிய ப்ரீமியம் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

சியோமி 13 சீரிஸ்

சியோமி 13 சீரிஸ்

சியோமியின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனான சியோமி 13 சீரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த சியோமி 13 சீரிஸ் ஸ்மார்ட்போனில் சியோமி 12எஸ் அல்ட்ராவில் உள்ள லைக்கா கேமரா லென்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

Xiaomi 13 விலை

Xiaomi 13 விலை

Xiaomi 13 மற்றும் Xiaomi 13 Pro விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். டிசம்பர் 14 ஆம் தேதி முதல் இதன் ஷிப்மென்ட் தொடங்க இருக்கிறது. சியோமி 13 இன் அடிப்படை மாடலான 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 3,999 (தோராயமாக ரூ.47,300) ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 4,999 (தோராயமாக ரூ.60,000) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 4,299 (தோராயமாக ரூ.51,000) எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 4,599 (தோராயமாக ரூ.54,400) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

சியோமி 13 ப்ரோ விலை

சியோமி 13 ப்ரோ விலை

சியோமி 13 ப்ரோ விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 4,999 (சுமார் ரூ.60,000) என தொடங்குகிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 6,299 (தோராயமாக ரூ.74,500) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி 13 சீரிஸ் தற்போது சீனாவில் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது. உலகளாவிய அறிமுகம் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி 13 சீரிஸ் இந்தியாவில் ஒப்பீட்டளவில் மிகவும் மலிவு விலையில் கொண்டுவரப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

Xiaomi 13 சிறப்பம்சங்கள்

Xiaomi 13 சிறப்பம்சங்கள்

Xiaomi 13 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது லெதர் ஃபினிஷ் அம்சத்துடன் வெளியாகி இருக்கிறது. இதில் 6.36 இன்ச் அளவில் பெரிய டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. 1080 x 2400px தெளிவுத்திறன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ஆதரவுடன் கூடிய முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. டால்பி விஷன், எச்டிஆர்10+ மற்றும் எல்எல்ஜி ஆதரவும் வழங்கப்பட்டிருக்கிறது.

டிரிபிள் லைக்கா கேமரா

டிரிபிள் லைக்கா கேமரா

இதில் டிரிபிள் லைக்கா கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஓஐஎஸ் ஆதரவுடன் கூடிய 50 எம்பி முதன்மை கேமரா, 3 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் ஆதரவு கொண்ட 10 எம்பி ஓஐஎஸ் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் என 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. முழு எச்டி வீடியோ பதிவு திறன்கள் கொண்ட 32 எம்பி செல்பி ஷூட்டர் இதில் இருக்கிறது.

அதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், 67 வாட்ஸ் வயர்டு சார்ஜிங், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உடன் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

OLED டிஸ்ப்ளே

OLED டிஸ்ப்ளே

Xiaomi 13 Pro சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், டால்பி விஷன் மற்றும் எச்டிஆர்10 ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 6.7 இன்ச் எல்டிபிஓ OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு இதில் வழங்கப்பட்டிருக்கிறது.

டிரிபிள் 50 எம்பி கேமாக்கள்

டிரிபிள் 50 எம்பி கேமாக்கள்

சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போனில் லைக்காவில் இயங்கும் கேமரா அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. இதில் டிரிபிள் 50 எம்பி சென்சார்கள் உள்ளன. அது அகலமான, அல்ட்ரா-வைட் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ்கள் ஆகும்.

4820 எம்ஏஎச் பேட்டரி

4820 எம்ஏஎச் பேட்டரி

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 120 வாட்ஸ் வயர்ட் சார்ஜிங் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4820 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சியோமி 13 மற்றும் 13 ப்ரோ ஆகிய இரண்டும் Android 13 அடிப்படையிலான MIUI 13 மூலம் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Leica Camera, Snapdragon 8 Gen 2 SoC Powered Xiaomi 13 Series Launched as a Best Premium Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X