லீ இகோ சூப்பர்போன், சூப்பர் அனுபவம் வழங்கும்.!

By Meganathan
|

பயன்பாடுகளில் புதுமை இல்லாத ஸ்மார்ட்போன்கள் அதிசிறந்த அம்சங்கள் கொண்டிருந்தாலும் பலன் இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை லீஇகோ சூப்பர்போன் கருவிகள் வழங்கி வருகின்றன.

லீஇகோ நிறுவனம் பயனர் அனுபவத்தைச் சிறப்பாக வழங்கிட 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்குகின்றது. இதன் மூலம் கருவிகள் முன்பை விட வேகமாக இயங்குவதோடு மல்டி டாஸ்கிங் செய்வது மற்றும் சிறந்த மல்டிமீடியா அனுபவத்தை வழங்கும்.

கருவிகள்

கருவிகள்

இன்றும் பல்வேறு நிறுவனங்கள் இன்றும் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியை விட குறைந்த அம்சங்கள் கொண்ட கருவிகளை வழங்கி வருகின்றன. ஆனால் லீ இகோ கருவிகள் அனைத்திலும் குறைந்த பட்சம் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்படுகின்றது.

பயன்பாடு

பயன்பாடு

இன்று ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் குறுந்தகவல் மற்றும் அழைப்புகளைத் தாண்டி பொழுதுபோக்கு, சமூக வலைத்தளம் மற்றும் கேமரா உள்ளிட்டவற்றை அதிகம் பயன்படுத்த துவங்கி விட்டனர்.

சூப்பர்போன்

சூப்பர்போன்

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பேர் 35 வயதுக்கும் குறைவானோர் இருக்கும் நிலையில் இளசுகளின் ஸ்மார்ட்போன் தேவைகளை பூர்த்தி செய்ய லீஇகோ நிறுவனத்தின் சூப்பர்போன் கருவிகள் தவறவில்லை என்றே கூற வேண்டும்.

யூஸர் இன்டர்ஃபேஸ்

யூஸர் இன்டர்ஃபேஸ்

பயனர்களின் அனுபவத்தை புதுவிதமாக வழங்க முக்கிய காரணமாக லீ இகோ நிறுவனத்தின் புதிய EUI 5.8 யூஸர் இன்டர்ஃபேஸ் மென்பொருள் எனலாம். புதிய யூஸர் இன்டர்ஃபேஸ் லீ இகோ நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை சூப்பர்போன்களான லீமேக்ஸ் 2 மற்றும் லீ 2 கருவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அம்சங்கள்

அம்சங்கள்

லீ இகோ EUI 5.8 மென்பொருள் மூலம் மேம்படுத்தப்பட்ட போன் மேனேஜர் கொண்டுள்ளது. மேலும் உங்கள் கருவியில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப்ஸ்களில் எந்தெந்த ஆப் வை-பை மற்றும் மொபைல் டேட்டா பயன்படுத்த வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய முடியும்.

ஆப்-லாக்

ஆப்-லாக்

லீ இகோ EUI 5.8 மென்பொருள் கொண்டு சூப்பர்போன் கருவிகளை ஆப் லாக் பயன்படுத்தி தனித்தனி ஆப்களுக்கு கைரேகை அல்லது பாஸ்கோடு மூலம் லாக் செய்து கொள்ள முடியும். இதோடு ஒரு முழு இணையப் பக்கத்தை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியும்.

அப்டேட்

அப்டேட்

புதிய அப்டேட் மூலம் மியூசிக் ஆப் பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. இந்த அம்சங்கள் பயனர்களை தங்களுக்கு பிடித்தமான பாடல்களை வேகமாகத் தேர்வு செய்ய வழி செய்கின்றது.

லீ மேக்ஸ் 2

லீ மேக்ஸ் 2

லீ இகோ நிறுவனத்தின் லீ மேக்ல் 2 கருவியானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் கொண்டிருக்கின்றது. புதிய சிப்செட் மூலம் அதிக பேட்டரி பேக்கப் வழங்குவதோடு சீரான வேகத்தையும் வழங்குகின்றது.

பட்ஜெட்

பட்ஜெட்

லீ 2 சூப்பர்போன் கருவியானது பட்ஜெட் விலையில் விலை உயர்ந்த அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. இந்தக் கருவியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
LeEco Superphone promises a brilliant user experience Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X