எதிர்பார்ப்புகளை துவம்சம் செய்த லீஈகோ லீ மேக்ஸ்.!
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 5.5 அங்குல குவாட் எச்டி 1440பி டிஸ்பிளே இடம்பெறும் என்று மேக்ஸ் 3 பற்றிய இதுவரை வெளியான தகவல்கள் ஒரே மாதிரியான கருத்தை தெரிவித்துள்ளன.
சீனாவின் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களில் ஒன்றான லீஈகோ, குறிப்பிடத்தக்க சந்தை பங்கைப் பெற கடுமையாக உழைத்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பிறகு லீமேக்ஸ் 3 என்ற பெயரிலான லீஈகோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஒன்று பற்றிய அறிக்கைகள் வெளியான வண்ணம் உள்ளது.

இப்போது, அதனை உறுதிப்படுத்தும் வண்ணம் லீஈகோ மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் பல படங்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பற்றிய சில சுவாரசியமான தகவலையும் அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பிடத்தக்க வகையில், லீ மேக்ஸ் 3 சார்ந்த படங்கள் இணையத்தில் கசிவது இதுவொன்றும் முதன்முறை இல்லை. முன்னர், கீக்பென்ஞ் தரநிலை தரவுத்தளத்தில் காணப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் துவக்கம் விரைவாக இருக்கும் என்பதை சமீபத்திய கசிந்த படங்கள் மறைமுகமாக அறிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications