லீ எகோ லீ 1எஸ் மற்றும் கே4 நோட் : எது கெத்து'னு இங்க பாருங்க.!!

By Meganathan
|

லீ எகோ நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லீ1எஸ் ஸ்மார்ட்போன் கருவியை ஜனவரி 20 ஆம் தேதி இந்தியாவில் வெளியிட்டது. லீ மேக்ஸ்' உடன் இணைந்து வெளியிடப்பட்ட இந்த கருவி பட்ஜெட் ரகத்தில் லெனோவோ கே4 நோட் போன்ற கருவிகளுடன் போட்டி போட தயார் நிலையில் இருக்கின்றது.

விரிவான சிறப்பம்சங்களை பார்த்து உங்களுக்கு எந்த கருவி வேண்டும் என நீங்களே முடிவு செய்யுங்கள்..

வடிவமைப்பு மற்றும் திரை

வடிவமைப்பு மற்றும் திரை

லீ 1எஸ் கருவி முற்றிலும் மெட்டல் வடிவமைப்பு கொண்டிருப்பதால் பார்க்க அழகாக இருப்பதோடு கைகளில் பயன்படுத்தவும் அருமையாக இருக்கின்றது. இதோடு பெஸல் இல்லா வடிவமைப்பு கைகளில் கச்சிதமாகவும் பொருந்தும்.

லெனோவோ கே4 நோட்

லெனோவோ கே4 நோட்

இதுவே கே4 நோட் கருவியானது ப்ளாஸ்டிக் வடிவமைப்பு மற்றும் லீ 1எஸ் கருவியை விட ஒரு சுற்று தட்டையாகவும் இருக்கின்றது. திரை அளவுகளை பொருத்த வரை இரு கருவிகளும் 5.5 இன்ச் 1080பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

இயக்கம்

இயக்கம்

லீ 1எஸ் கருவி பட்ஜெட் விலையில் சிறப்பான பிராசஸர் கொண்டுள்ளது. ஆனால் கே 4 நோட் கருவி ஆக்டா கோர் மீடியாடெக் எம்டி6753 பிராசஸர் கொண்டிருக்கின்றது. லீ எகோ 1எஸ் கருவியில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹூலியோ எக்ஸ்10 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இரு கருவிகளிலும் 3ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது.

கேமரா

கேமரா

இரு கருவிகளிலும் கேமரா அம்சங்களில் அதிகப்படியான மாற்றங்கள் இல்லை என்றே கூற வேண்டும். 13 எம்பி ப்ரைமரி கேமரா, ஆட்டோஃபேகஸ் மற்றும் எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் லீ 1எஸ் கேமரா ஃபோகஸ் செய்ய 0.09 நொடிகள் மட்டுமே எடுத்து கொள்வது இந்த கேமராவின் தனித்துவத்தை வெளிப்பட்டுத்துகின்றது.

மெமரி

மெமரி

மெமரியை பொருத்த வரை கே4 நோட் கருவியில் 16ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. லீ 1எஸ் கருவியில் 32 ஜிபி இன்டர்னல் மெமிரி வழங்கப்பட்டுள்ளது.

மென்பொருள்

மென்பொருள்

லீ எகோ 1எஸ் அந்நிறுவனத்தின் சொந்த யூஸர் இன்டர்ஃபேஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 5.0.2 லாலிபாப் இயங்குதளம் கொண்டிருக்கின்றது என்றாலும் விரைவில் மார்ஷ்மல்லோ அப்டேட் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கே4 நோட் கருவியானது லெனோவோவின் வைப் யூஸர் இன்டர்ஃபேஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் கொண்டிருக்கின்றது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

இரு கருவிகளும் பின்பக்கம் கேரைகே ஸ்கேனர் கொண்டிருக்கின்றது. எனினும் லீ 1எஸ் கருவியில் 5 கைரேகைகளை பதிவு செய்ய முடியும், ஆனால் கே4 நோட் கருவியில் இரு ரேகைகளை மட்டுமே பதிவு செய்ய முடியும்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை இரு கருவிகளிலும் 4ஜி எல்டிஈ, வை-பை 802.11, மொபைல் ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 4.1 மற்றும் ஜிபிஎஸ் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

விலை

விலை

லெனோவோ கே4 நோட் கருவியானது இந்திய சந்தையில் ரூ.11,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. லீ 1எஸ் கருவி ரூ.10,999 விலைக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் ப்ளாஷ் முறையில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கின்றது. விற்பனை பிப்ரவரி 2 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
LeEco Le 1s vs Lenovo K4 Note: Which is the budget phone for you Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X