அதிக சலுகைகள் அதிக நிறுவனங்களுடன் இணைந்து வழங்கும் பிரபல நிறுவனம்!

Written By:
    X

    இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் லீஇகோ நிறுவனம் அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் தளங்களுடன் தனது ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக இன்று அறிவித்துள்ளது.

    இந்தியாவில் பண்டிகை தின சலுகை வழங்கும் நோக்கில் லீஇகோ தனது ஃபிளாக்ஷிப் கருவியான லீ மேக்ஸ் 2 கருவியினை ரூ.17,999க்கு வழங்க இருக்கின்றது. இந்த விலைக்குக் கிடைக்கும் லீ மேக்ஸ் 2 கருவியில் 5.7 இன்ச் டிஸ்ப்ளே, 21 எம்பி பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர், 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த லீஇகோ அதிகாரி அதுல் ஜெயின், "ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் சிறப்பான ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தோம், மேலும் இது மேலும் உறுதியானதாக இருக்கும் என் நம்புகின்றோம், லீ மேக்ஸ் 2கருவியினை மேலும் அதிகளவு பயனர்கள் பயன்படுத்த அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் எங்களது பயனர்கள் லீ மேக்ஸ் 2 கருவியை ரூ,17,999 விலையில் கிடைப்பதால் வரவேற்பார்கள் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    லீஇகோ

    இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் லீஇகோவின் சொந்த லீமால்.காம் இல்லாமல் இந்தியாவில் இயங்கி வரும் பல்வேறு பிரபல இணைய வர்த்தகர்களிடமும் லீஇகோ கருவிகள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

    அமேசான்

    லீஇகோ நிறுவனத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கின்றது. பண்டிகை காலத்தில் பயனர்கள் லீ மேக்ஸ் 2 கருவிகளைப் பயன்படுத்துவது எளிமையானதாக இருக்கும் என அமேசான் நிறுவனத்தின் அருன் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    வரவேற்பு

    மேலும் லீ மேக்ஸ்2 கருவி இந்தப் பண்டிகை காலத்தில் பலரையும் ஈர்ப்பதோடு அதிகளவு பயனர்களின் வரவேற்பைப் பெறும் என அருன் தெரிவித்திருந்தார்.

    புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

    ஸ்னாப்டீல்

    லீஇகோ நிறுவனத்துடனான ஒப்பந்தம் லீஇகோ கருவிகளை அதிகளவு இணையப் பயனர்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதோடு இந்தப் பண்டிகை காலத்தில் எங்களது பயனர்களுக்கு அதிகளவு பொருட்களை கொண்டு சிறப்பான அனுபவத்தை வழங்குவோம் என ஸ்னாப்டீல் நிறுவனத்தின் டோனி நவீன் தெரிவித்துள்ளார்.

    பண்டிகை

    பண்டிகை கால சலுகையாக லீஇகோவின் லீ மேக்ஸ் 2 கருவி குறைந்த கால சலுகையாக லீமால்.காம் தளம் உள்பட ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற தளங்களிலும் கிடைக்கும்.

    புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

    விற்பனை

    அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை, ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே மற்றும் ஸ்னாப்டீல் அன்பாக்ஸ் தீபாவளி விற்பனைகளில் லீ மேக்ஸ் 2 கருவியானது ரூ.17,999க்கு கிடைக்கும். இந்த விற்பனை அக்டோபர் 1 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.

    பிளாஷ் விற்பனை

    மேலும் லீமால்.காம் தளத்தின் பயனர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் பிளாஷ் விற்பனை மூலம் 2000 சிறப்பு கூப்பன் மற்றும் கூடுதலாக ரூ.1000 மதிப்பிலான பரிசு கூப்பன் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை வழங்கப்படுகின்றது.

    புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

    திரை

    லீ மேக்ஸ் 2 கருவியானது 5.7 இன்ச் டிஸ்ப்ளே 2560*1440 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்படுகின்றது.

    பேட்டரி

    லீ மேக்ல் 2 சூப்பர்போன் கருவியானது 3100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இத்துடன் வேகமாக சார்ஜ் செய்யும் அம்சம் மற்றும் வை-பை, 3ஜி, 4ஜி மற்றும் வோல்ட் இ அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

    யுஎஸ்பி

    அடுத்த தலைமுறை சூப்பர் போன் கருவிகளில் லீஇகோ நிறுவனம் யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி மற்றும் லீஇகோவின் சொந்த சிடிஎல்ஏ தொழில்நுட்பம் பயன்படுத்துகின்றது. இதுபோன்ற தொழில்நுட்பம் ஒன்றை உலகளவில் முதலில் அறிமுகம் செய்த நிறுவனமாக லீஇகோ இருக்கின்றது.

    கேமரா

    லீ மேக்ஸ் 2 கருவியானது 21 எம்பி பிரைமரி கேமரா, 4கே வீடியோ பதிவு செய்யும் வசதி, 8 எம்பி முன்பக்க கேமராவும், செல்பீக்களுக்கு வீடியோ காலிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

    பொழுதுபோக்கு

    லீ மேக்ஸ் 2 பயனர்களுக்கு ரூ.4990 மதிப்புடைய 1 ஆண்டு இலவச லீஇகோ சந்தா வழங்கப்படுகின்றது. இந்தச் சந்தாவை பயன்படுத்தி லீஇகோ பயனர்கள் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.

    ஹங்காமா

    ஹங்காமா நிறுவனத்துடனான ஒப்பந்தம் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க இருக்கும் நிலையில் பயனர்கள் 25 இந்திய மொழிகளில் சுமார் 3.5 மில்லியன் பாடல்கள் மற்றும் 6 சர்வதேச மொழிகளில் சுமார் 1 மில்லியன் பாடல்களையும் அனுபவிக்க முடியும் அதுவும் எச்டி தரத்தில். மேலும் லீஇகோ சூப்பர் போன் கருவிகளுடன் இணைக்கப் பெற்ற ஹங்காமா மியூசிக் ஆப் மூலம் வரம்பற்ற ஆடியோ மற்றும் வீடியோ டவுன்லோடுகளை மேற்கொள்ள முடியும். இச்சேவைகள் முழுமையாக விளம்பர குறுக்கீடு இல்லாமல் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.

    புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

    சேவை

    பொழுதுபோக்கு சேவைகளுடன் சேர்த்து 50க்கும் அதிகமான சர்வதேச இசை நிகழ்ச்சிகளுக்கான நுழைவு சீட்டு, சர்வேத அளவில் முக்கிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான பிரத்தியேக நேரலைச் சேவையை பெற முடியும். பயனர்களுக்குக் கூடுதலாக 2000+ அதிகமான திரைப்படங்கள், 3000+ அதிகமான நிகழ்ச்சிகள் மற்றும் 100+ அதிகமான நேரலைத் தொலைக்காட்சி சேனல்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகின்றது.

    ஜியோ

    லீ மேக்ஸ் 2 கருவியில் ஜியோ சேவை பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய சலுகைகளுடன் லீ இகோ தனது ஃபிளாக்ஷிப் கருவியின் விற்பனையை பல்வேறு இணைய வரத்தகர்களுடன் சேர்ந்து நீட்டித்திருப்பது பல்வேறு லீஇகோ பயனர்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும்.

    புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    English summary
    LeEco expands e-commerce partnerships With Amazon & Snapdeal

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more