ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய சாதனை.!!

Written By: Staff

லீ 1எஸ் கருவியின் முன்பதிவு துவங்கிய 20 நொடிகளில் சுமார் 95,000 பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர். மொத்தமாக இந்த கருவியை சுமார் 10.30 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

ஒரே ப்ளாஷ் விற்பனையில் அதிக முன்பதிவுகளை பெற்றிருப்பது, குறைந்த நேரத்தில் அதிக முன்பதிவுகளை பெற்றிருப்பது மற்றும் விற்பனைக்கு முன் அதிக முன்பதிவுகளை கடந்திருப்பது என லீஈகோ நிறுவனம் மூன்று சாதனைகளை புரிந்திருக்கின்றது.

இது குறித்து அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரியான அதுல் ஜெயின் கூறும் போது, 'இத்தகைய வரவேற்பு அளித்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பெறாத சாதனையை புரிந்திருப்பது பெருமையாக இருக்கின்றது' என அவர் தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சூப்பர் போன்

சூப்பர் போன்

அறிமுக விழாவில் லீஈகோ நிறுவனம் லீ மேக்ஸ் மற்றும் லீ 1எஸ் என இரு கருவிகளை அறிமுகம் செய்தது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கருவிகளில் அட்டகாசமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்பதிவு

முன்பதிவு

அறிமுக விழா நடைபெற்ற 24 மணி நேரத்தில் லீ 1எஸ் கருவிக்கான முன்பதிவுகள் 1 லட்சத்தை கடந்து விட்டது. மொத்தம் 70,000 கருவிகளுக்கு சுமார் 605,000 பேர் முன்பதிவு செய்திருந்தது ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய சாதனையாக அமைந்துவிட்டது.

ப்ளாஷ் விற்பனை

ப்ளாஷ் விற்பனை

பிப்ரவரி 9 ஆம் தேதி லீ 1எஸ் கருவியை தவற விட்டவர்கள், இந்த கருவியை அடுத்த ப்ளாஷ் விற்பனையில் வாங்கி கொள்ள முடியும். இந்த கருவிக்கான அடுத்த விற்பனை பிப்ரவரி 16 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கின்றது.

விலை

விலை

ரூ.10,999க்கு லீ 1எஸ் கருவியானது மெட்டல் வடிவமைப்பு, கைரேகை ஸ்கேனர், 5.5 இன்ச் எஃப்எச்டி திரை, உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரபலம்

பிரபலம்

வெளியான மூன்றே மாதங்களில் இந்தியா அல்லாத மற்ற சந்தைகளிலும் இந்த கருவி பிரபலமாகியிருக்கின்றது. இந்த கருவியை 5 நிமிடம் சார்ஜ் செய்தால் 3.5 மணி நேரம் டாக்டைம் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
LeEco Crosses The Magic Million, Creates Three Industry Records Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot