Home
Mobile

8-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சியோமி கொடுக்கும் சர்ப்ரைஸ்; என்னது அது?

அந்த வரிசையில் சியோமி நிறுவனத்தின் அடுத்தகட்ட ஸ்மார்ட்போன்கள், வருகிற மே 31 ஆம் தேதி அன்று நடக்கும் நிகழ்வொன்றில் வெளியாக உள்ளது.

By Muthuraj

போதுமான அளவில் சூப்பர் பட்ஜெட், பட்ஜெட் மற்றும் மிட்-ரேன்ஜ் விலையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்ட சியோமி நிறுவனம், மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்களை சந்தையில் களமிறக்கி வருகிறது.

8-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சியோமி கொடுக்கும் சர்ப்ரைஸ்; என்னது அது?

அந்த வரிசையில் சியோமி நிறுவனத்தின் அடுத்தகட்ட ஸ்மார்ட்போன்கள், வருகிற மே 31 ஆம் தேதி அன்று நடக்கும் நிகழ்வொன்றில் வெளியாக உள்ளது. இந்த நிகழ்வில், மி 7, மி 8 மற்றும் மி பேண்ட் 3 ஆகியவைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு ஸ்பெஷல் எடிஷன் ஆகும்.!

ஒரு ஸ்பெஷல் எடிஷன் ஆகும்.!

வெளியாகவுள்ள மி 7 ஸ்மார்ட்போன் தான் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட ஸ்மார்ட்போன் என்பதில் குழப்பம் இல்லை. அப்படி இருக்க உடனடியாக மி 8 ஸ்மார்ட்போனும் வெளியாவது ஏன்..? என்பது தான், இங்கு எழும் ஒரே கேள்வி. மி8 ஆனது சியோமி நிறுவனத்தின் 8-வது ஆண்டு விழாவை கொண்டாடும் முனைப்பின் கீழ் வெளியாகும் ஒரு ஸ்பெஷல் எடிஷன் ஆகும்.

அண்டர்-டிஸ்பிளே கைரேகை சென்சாரை கொண்டிருக்கும்.!

அண்டர்-டிஸ்பிளே கைரேகை சென்சாரை கொண்டிருக்கும்.!

சியோமி மி 8 தொடர்பாக நிறுவனத்திடமிருந்து எந்த ஒரு உத்தியோகபூர்வ உறுதிமொழியும் இன்னும் வெளியாவையை என்றாலும் கூட, அதன் அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளன. விபோ தளம் வழியாக வெளியாகியுள்ள லீக்ஸ் தகவலின்படி, மி 8 ஆனது அண்டர்-டிஸ்பிளே கைரேகை சென்சாரை கொண்டிருக்கும்.

நிறுவனத்தின் மியூஐ 9-ஐ கொண்டு இயங்கும்.!

நிறுவனத்தின் மியூஐ 9-ஐ கொண்டு இயங்கும்.!

வெளியானது மிகவும் குறுகிய வீடியோ கிளப் தான் என்றாலும் கூட, போதுமான தகவல்களை அறிய முடிகிறது. காட்சிப்படும் மி 8 ஆனது மிகவும் கடினமானதாக உள்ளது. உடன் ஹோம் ஸ்க்ரீனை பார்க்கும் போது, மி 8 ஆனது நிறுவனத்தின் மியூஐ 9-ஐ கொண்டு இயங்கும் என்றே தோண்றுகிறது. உட்பொதிக்கப்பட்டுள்ள கைரேகை சென்சார் ஆனது, பயனரின் கட்டைவிரலை ரீட் செய்யும். டிஸ்பிளேவின் குறிப்பிட்ட பகுதியின் கீழ் பொருத்தப்பட்டிருக்கும். அதை காட்சிப்படுத்தும் வண்ணம் அந்த இடம் ஒளிரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3டி பேஷியல் ரிக்ககனைசேஷன்.!

3டி பேஷியல் ரிக்ககனைசேஷன்.!

(வெளியான அறிக்கையின்படி) இந்த சியோமி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது, ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ஐபோன் எக்ஸ்-ல் இடம்பெற்றுள்ள 3டி பேஷியல் ரிக்ககனைசேஷன் அம்சத்தினை கொண்டுள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன், மி 8 ஸ்மார்ட்போனில், இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியானதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த செயல்முறையானது மிகவும் பாதுகாப்பான வகையில் இருக்க வேண்டும்என்பதால், 2டி படத்திற்குப் பதிலாக பயனர் முகத்தின் ஒரு 3டி வரைபடத்தை இந்த தொழில்நுட்ப்பம் உருவாக்கும்.

மி 8 ஸ்மார்ட்போனில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்.?

மி 8 ஸ்மார்ட்போனில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்.?

நிறுவனத்தின் 8-வது ஆண்டு பதிப்பு என்பதால், இந்த ஸ்மார்ட்போன் மிகவும் சிறப்பான அம்சங்களை பெறும் என்பதில் சந்தேகம் வேண்டாம். குறிப்பாக க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 SoC பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒரு OLED டிஸ்பிளே இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான பிற விவரங்கள் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. வந்ததும் அதை உடனுக்குடன் அறிந்து கொள்ள, தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Leaked Xiaomi Mi 8 video shows in-screen fingerprint sensor in action. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X