நம்ப வைத்து ஏமாற்றிய ஆப்பிள் நிறுவனம்; இந்திய பயனர்கள் அதிருப்தி.!

இருந்தாலும் கூட, ஐபோன் எஸ்இ வரிசையின் கீழ், அடுத்தடுத்த ஐபோன்கள் வெளியாகவே இல்லை.

|

ஆப்பிள் நிறுவனத்தின், முதல் தலைமுறை ஐபோன் எஸ்இ ஆனது கடந்த மார்ச் 2016 ல் வெளியிடபட்டது. நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மிக மலிவான ஐபோன் என்பதால் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் கூட, ஐபோன் எஸ்இ வரிசையின் கீழ், அடுத்தடுத்த ஐபோன்கள் வெளியாகவே இல்லை.

அது சார்ந்த கேள்விகளுக்கும் கூட ஆப்பிள் நிறுவனம் மௌனமாகவே இருந்தது. இப்படியே இரண்டு ஆண்டுகள் கழிந்தன. பின்னர் 2018-ல் தான் ஆப்பிள் ஐபோன் எஸ்2 சார்ந்த லீக்ஸ் தகவல்கள் இணையத்தில் உலா வரத்தொடங்கின.

எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது.!

எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது.!

அந்நாளில் இருந்தே, வெளியாகப்போகும் அடுத்தக்கட்ட ஐபோன் ஆனது, ஆப்பிள் ஐபோன் எஸ்இ (2018) என்று அழைக்கப்படுமா அல்லது ஐபோன் எஸ் 2 என்கிற பெயரை பெறுமா.? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்பது பற்றிய விவாதங்கள் தான் நிகழ்ந்தனவே தவிர, விலை பற்றிய எந்தவிதாமான சந்தேகமும் எழவில்லை. ஏனெனில் ஐபோன் எஸ்இ என்றாலே அது மலிவாகத்தான் இருக்கும். அதிலும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ தயாரிப்பு தொழிற்சாலைகள் இந்தியாவில் இருப்பதால், இங்கு இன்னும் மலிவான விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது தற்போது பொய்யாகி விட்ட

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-ன் அதே வடிவமைப்பு மொழியை கொண்டுள்ளது.!

ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-ன் அதே வடிவமைப்பு மொழியை கொண்டுள்ளது.!

நிகழப்போகும் ​​WWDC 2018 டெவலப்பர் மாநாட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ஐபோன் எஸ்இ2-ன் பிரதான அம்சங்கள் வெளியாகியுள்ளன. அது பயனர்களை பரவசப்படுத்தும் மறுகையில் அதிருப்தியையும் சேர்த்தே ஏற்படுத்தியுள்ளது. அதே வழக்காமான சிறிய வடிவமைப்பை பெற்றுள்ள ஐபோன் எஸ்இ (2018) ஆனது, முன்னர் வெளியான ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-ன் அதே வடிவமைப்பு மொழியை கொண்டுள்ளது.

ஆல்-ஸ்க்ரீன் டிஸ்பிளே கொண்டிருக்கும்.!

ஆல்-ஸ்க்ரீன் டிஸ்பிளே கொண்டிருக்கும்.!

முன்னர் வெளியான தகவலின்படி, ஐபோன் எஸ்இ (2018) ஆனது, அசல் ஐபோன் எஸ்இ-யின் வடிவமைப்பு மொழி மற்றும் பரிமாணங்களைப் பகிர்ந்து கொள்ளும் என்று கூறின. ஆனால் தற்போது, பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட தளம் ஒன்றின் வழியாக வெளியாகியுள்ள புகைப்படம் ஆனது, வரவிருக்கும் இரண்டாம் தலைமுறை ஐபோன் எஸ்இ ஆனது, அசலை விட சிறியதாக இருக்கும் மற்றும் ஆல்-ஸ்க்ரீன் டிஸ்பிளே கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்தி உள்ளது.

ஆப்பிள் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு.!

ஆப்பிள் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு.!

இது உண்மையானால், அதாவது வெளியாகும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ (2018) ஆனது ஐபோன் எக்ஸ் உடனாக சில ஒற்றுமைகளை பகிர்ந்து கொண்டால், நிச்சயமாக டச் ஐடி அம்சம் அகற்றப்பட்டு, பேஸ் ஐடி அம்சம் இணைக்கப்படும். அடுத்தபடியாக, பின்புற வடிவடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்படும். அதாவது, கண்ணாடி பின்புறம் இடம்பெறும். இது ஆப்பிள் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் சேர்க்கும்.

256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாறுபாடு.!

256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாறுபாடு.!

இது தவிர, ஐபோன் 7-ல் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட ஆப்பிள் ஏ10 ஃயூஷன் சிப்செட், வரவிருக்கும் எஸ்இ 2 -வில் இடம்பெறவும் வாய்ப்புள்ளது. அதாவது ஐபோன் 7-ல் உள்ள வன்பொருள் அம்சங்களை கொண்டிருக்கும் அனால், ஒற்றை பின்புற கேமரா சென்சார் கொண்டு இருக்கும். வெளியான தகவல் உண்மையாகும் பட்சத்தில், ஐபோன் எஸ்இ2 ஆனது 2ஜிபி ரேம் உடனான 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாறுபாடு கொண்டு வெளியாகும்.

மிஞ்சியுள்ளது ஏமாற்றம் மட்டுமே.!

மிஞ்சியுள்ளது ஏமாற்றம் மட்டுமே.!

இப்போது வரையிலாக, ஐபோன் எஸ்இ2 -வின் விலை விவரங்கள் எங்களிடம் இல்லை, ஆனால் நிச்சயமாக, இதன் பேஸ் ஐடி மற்றும் வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு ஆகிய அம்சங்கள், இதை ஒரு மலிவான ஐபோனாக வெளியிடாது. ஆக, மேலுமொரு மலிவான ஐபோன் வெளியாகும் என்றும், அதை வாங்க கனவு கண்டா இந்திய பயனர்களுக்கும் மிஞ்சியுள்ளது ஏமாற்றம் மட்டுமே.!

Best Mobiles in India

English summary
Leaked Press Render of Apple iPhone SE (2018) Shows the Display Notch. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X