லீக் ஆனது ஒன்ப்ளஸ் 5 ஸ்கெட்ச் மூலம் வெளியான கருவியின் அசத்தல் அம்சம்.!

Written By:

இதுவரை அறிவிக்கப்பட்ட ஒன்ப்ளஸ் 5 கருவி சார்ந்த அனைத்து ஆன்லைன் லீக்ஸ் தகவல்களுடன் ஒப்பிடும் போது இதுவே மிகவும் வைரலான ஒரு தகவலாக தெரிகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் நிறுவனத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக இந்த சாதனம் அறிவிக்கப்படஉள்ள நிலைப்பாட்டில் மிகவும் எதிர்பார்த்தபடி டீஸர்கள் மற்றும் கசிவுகள் எந்த இடைவெளியும் இல்லாமல் வெளியான வண்ணம் உள்ளன.

லீக் ஆனது ஒன்ப்ளஸ் 5 ஸ்கெட்ச் மூலம் வெளியான கருவியின் அசத்தல் அம்சம்.!

தற்போது ஆன்லைனில் வெளியாகியுள்ள ஒரு புதிய டீஸர் ஸ்மார்ட்போனின் பின்புறத்தை வெளிப்படுத்துகிறது. இந்த டீஸரின் படி, சாதனம் கிடைமட்டமாக (ஹாரிஸான்டல்) சீரமைக்கப்பட்ட பின்பக்கத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. உடன் இரட்டை கேமரா அமைப்புக்கு அருகாமையிலேயே பிளாஷ் அமைப்பு உள்ளதையும் இந்த தகவல் காட்சிப்படுத்துகிறது. கருவியின் மையத்தில் அமைந்துள்ள நிறுவனத்தின் லோகோவையும் கவனிக்க முடிகிறது.

வெளியாகியுள்ள இந்த பொது ஓவியமானது மேல் இடது மற்றும் மேல் வலதுபுறங்களில் - வலதுபுறத்தில அண்டெனா கோடுகளை சித்தரிக்கிறது. அது தவிர்த்து வேறெந்த தகவலும் இந்த படத்தின் மூலம் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் இந்த கசிவு உண்மையாக இருக்குமானால் இரட்டை கேமரா ஒருங்கிணைப்பு இந்த தொலைபேசி உறுதியான ஒரு அம்சம் என்று எடுத்துக்கொள்ளப்படலாம்.

ஒரு சில நாட்களுக்கு முன் வெளியான தகவலில் இருந்து ஒன்ப்ளஸ் 5 ஆனது ஒரு 3300எம்ஏஎச் பேட்டரி திறனுக்கு பதிலாக 3600எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் உடன் இந்த ஸ்மார்ட்போன் வேகமான சார்ஜிங் திறனையும் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

லீக் ஆனது ஒன்ப்ளஸ் 5 ஸ்கெட்ச் மூலம் வெளியான கருவியின் அசத்தல் அம்சம்.!

இது தவிர சமீபத்தில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் இக்கருவி ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயங்கும் என்பதை உறுதிசெய்துள்ளார், மேலும் அது மெல்லிய முதன்மை ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் இக்கருவி அடர் சிவப்பு, தங்கம், கருப்பு மற்றும் ஒளி நீலம் / சியான் போன்ற நான்கு வண்ண மாறுபாட்டிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கருவி சார்ந்த அடிப்படை அம்சங்கள் வெளியாகும் போதிலும் கூட விலை தொடர்பான விவரங்கள் இதுவரை நிறுவனம் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Leaked OnePlus 5 Sketch Shows Horizontal Dual Camera Setup. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot