ஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.!

கண்கூடாக காணும் அம்சங்களை தவிர்த்து வேறெந்த விவரக்குறிப்புகளும் வெளியாகிவில்லை.

|

சியோமி நிறுவனத்தின் ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூன் 25 ஆம் தேதி அறிமுகமாகும் என்பதை சியோமி நிறுவனமே உறுதிப்படுத்தி விட்ட நிலைப்பாட்டில், அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக, ரெட்மீ 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் சில "லைவ்" புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.

வெளியான லீக்ஸ் புகைப்படத்தின் வழியாக இந்த ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த லீக்ஸ் புகைப்படத்தின் வழியாக, சியோமி ரெட்மீ ப்ரோ ஆனது அப்படி இருக்குமா.? அல்லது இப்படி இருக்குமா.? என்கிற கற்பனைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன என்றே கூறலாம்.

19: 9 என்கிற அளவிலான திரை விகிதம்.!

19: 9 என்கிற அளவிலான திரை விகிதம்.!

சீன சான்றிதழ் வலைத்தளமான TENAA-வின் வழியாக பட்டியலிடப்பட்ட புகைப்படங்கள் குறிப்பிட்டபடியே, இந்த ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் வெளிப்படையான முறையில் அதன் 19: 9 என்கிற அளவிலான திரை விகிதத்தை காட்சிப்படுத்துகிறது. இந்த படங்கள் சீன மைக்ரோ பிளாகிங் போர்டல் ஆன விபோ வழியாக (Weibo) வெளியாகியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி நிறுவனத்தின் MIUI கஸ்டமைசேஷன்.!

சியோமி நிறுவனத்தின் MIUI கஸ்டமைசேஷன்.!

கண்கூடாக காணும் அம்சங்களை தவிர்த்து வேறெந்த விவரக்குறிப்புகளும் வெளியாகிவில்லை. அப்படியாக ஆக்டிவ் ஆக உள்ள டிஸ்பிளேவின் வழியாக காணப்பட்ட ஒரு அம்சம் தான் - சியோமி நிறுவனத்தின் MIUI கஸ்டமைசேஷன் ஆகும். எனினும், ஒரு எரிச்சலூட்டும் விஷயமாக ஸ்மார்ட்போனின் கீழே உள்ள பெரிய கன்னம் உள்ளது, இது ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவின் அழகை கெடுக்கிறது என்றே கூறலாம்.

ஐபோன் எக்ஸ்-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்துடன் நெருக்கமாக இருக்கலாம்.!

ஐபோன் எக்ஸ்-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்துடன் நெருக்கமாக இருக்கலாம்.!

அதிக அளவிலான ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்தை வழங்கும் நோக்கத்தின் கீழ் நாட்ச் வடிவமைப்பை பெற்றுள்ள ரெட்மீ 6 ப்ரோ ஆனது 18: 9 என்கிற அளவிலான திரை விகிதத்தை கொண்ட தற்போதைய ரெட்மீ ஸ்மார்ட்போன்களை விட உயர்ந்தஸ்க்ரீன் ரியல் எஸ்டேட்டை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் இது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் வழங்கிய ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்துடன் நெருக்கமாக இருக்கலாம் அல்லது மி மிக்ஸ் 2 போன்றே இருக்கலாம்.

ஸ்னாப்டிராகன் 625 SoC கொண்டிருக்கும்.!

ஸ்னாப்டிராகன் 625 SoC கொண்டிருக்கும்.!

ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தை பொறுத்தவரை, இரட்டை கேமராக்கள் செங்குத்தாக சீரமைக்கப்பட்டுள்ளன (ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போன்றே). முன்னர் வெளியான எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மீ 6 ப்ரோ ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உடன் சேர்ந்து MIUI 9.6 கொண்டு வெளியாகும். உடன் ஒரு 2.0GHz ஆக்ரா-கோர் செயலி உடனான ஸ்னாப்டிராகன் 625 SoC கொண்டிருக்கும்.

மீடியா டெக் ஹீலியோ பி23 அல்லது ஹீலியோ பி60 சிப்செட்.!

மீடியா டெக் ஹீலியோ பி23 அல்லது ஹீலியோ பி60 சிப்செட்.!

ரெட்மீ 6 மற்றும் ரெட்மீ 6ஏ ஆகியவை ஹீலியோ பி22 மற்றும் ஏ22 சிப்செட்களுடன் வந்ததால் இந்த சியோமி ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் ஹீலியோ பி23 அல்லது ஹீலியோ பி60 சிப்செட்டை பயன்படுத்தலாம். பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. பல்வேறு ரேம் / சேமிப்பக கட்டமைப்புகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது நிச்சயமாக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடலில் வெளியாகும்.

ஒரு 4000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும்.!

ஒரு 4000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும்.!

மேலும் ரெட்மி 6 ப்ரோ ஆனது 5.84 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. உடன் இது ஒரு 4000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும். முன்னதாக வெளியான ரெட்மீ Y2 (சீனாவில் ரெட்மீ எஸ்2) ஸ்மார்ட்போனில் உள்ள அதே பின்புற கேமரா அமைப்பு இடம்பெறலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை ஒரு 5எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். மேலும் பல சியோமி ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Leaked Live Images of Xiaomi Redmi 6 Pro Leave Nothing to the Imagination. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X