ஆப்பிள் நிறுவனம் அடித்த ஈ அடிச்சான் காப்பி தான் - ஐபோன் 8.!?

வெளியான தகவலின் படி, வரும் ஐபோன் பதிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்ட கேலக்ஸி எஸ்8 கருவியுடன் பொருந்துவது போல் உள்ளது.

|

ஆப்பிள் நிறுவனத்தின் கடும் போட்டியாளரான சாம்சங் சமீபத்தில் அதன் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ ஆகிய இரண்டு தலைமை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த சாதனம் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட எந்த கருயை விடவும் சற்று வித்தியாசமாக உள்ளது ஆனால் மறுபக்கம் ஆப்பிள் நிறுவனமோ அதே போன்ற வடிவமைப்பில் தான் ஆப்பிள் ஐபோன் கருவிகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது.

இதனை தொடர்ந்து அடுத்த வெளியாகும் ஐபோன் 8 கருவியில் புதிய அம்சங்கள் இடம் பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் கீழ் என்னென்ன புதிய அம்சங்களை ஐபோன் 8 கருவி பெறும்.?

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

வெளியான தகவலின் கீழ் எதிர்வரும் 2017 ஐபோன் ஆனது 'ஐபோன் பதிப்பு' என்று கூறப்பட்டுள்ளது, மற்றும் இந்த சாதனம் ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டு வரும் என்றும் வதந்தி நிலவுகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

மேலும் தகவலின் படி, வரும் ஐபோன் பதிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்ட கேலக்ஸி எஸ்8 கருவியுடன் பொருந்துவது போல் உள்ளது. அதாவது 2.5டி கிளாஸ் பாதுகாப்பு கொண்ட ஒரு ஓல்இடி இணைந்த மேல் மற்றும் கீழ் குறைந்த பெசல்களில் ஒரு இரட்டை வளைந்த டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது

செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது

பொதுவான வித்தியாசம் என்னவென்று பார்த்தல் கருவியின் பின்புறத்தில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது மற்றும் எல்இடி ப்ளாஷ் வலது காப்ஸ்யூல் வடிவ படக்கருவி அமைவுக்கு கீழே வைக்கப்பட்டுளளது. உடன் கைரேகை ஸ்கேனர் ஒன்றும் அமைந்துள்ளது.

ஐபோன் 7 மாதிரி

ஐபோன் 7 மாதிரி

மேலும் இந்த ஆண்டில் ஓல்இடி டிஸ்ப்ளே கொண்ட புதிய ஐபோன் 8 கருவியை நாம் காணலாம் உடன் மேம்படுத்தப்பட்ட எல்சிடி திரை கொண்ட ஐபோன் 7 மாதிரிகளான ஜபோன் 7எஸ் மற்றும் 7எஸ் பிளஸ் அலகுகளையும் காணலாம்.

மேம்படுத்தல்கள்

மேம்படுத்தல்கள்

இந்த சமீபத்திய ஐபோன் 8 சாந்த தகவலின் மூலம் இக்கருவி ஓல்இடி காட்சி, புதிய சென்சார் அமைப்பு, முகப்பு பொத்தானை பதிலாக திரையில் உட்பொதிந்த ஒரு செயல்பாடு பகுதியிலான டச்ஐடி (TouchID) மற்றும் வயர்லெஸ் சார்ஜ் ஆகிய மேம்படுத்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த மேம்படுத்தல்களின் கீழ் பார்க்கும் போது இக்கருவியின் அலகு சுமார் 1,000 டாலர்களுக்கு மேல் செலவாகலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஓவர் சீன் போட்ட ஐபோன் 7, ஓரங்கட்டியது ஒரு ஸ்மார்ட்போன்.!

புகைப்படங்கள் : ஐட்ராப்

Best Mobiles in India

English summary
Leaked : iPhone 8 with dual rear camera set-up. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X