புதிய ஐபோன்களின் புகைப்படங்கள் வெளியானது: செப்டம்பர் 12 ரிலீஸ்.!

மேலும் கண்டிப்பாக சியோமி சாதனங்களை விட அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம்.

|

ஐபோன் என்றாலே புதிய முயற்சி மற்றும் புதிய தொழில்நுட்பம் என்று தான் கூறவேண்டும், அந்த வகையில் வரும் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் ஆப்பிள் ஐபோன் வெளீயிட்டு விழாவில் புதிய ஐபோன் மாடல்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்ற சாதனங்களை அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்டிப்பாக சியோமி சாதனங்களை விட அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம்.

புதிய ஐபோன்களின் புகைப்படங்கள் வெளியானது: செப்டம்பர் 12 ரிலீஸ்.!

குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது, மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்காசமான ஆப்பிள் ஐபோன் மாடலகள்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

தற்சமயம் 5.8-இன்ச் மற்றும் 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்ட ஐபோன்களின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது, மேலும் இவை ஐபோன் எக்ஸ் என அழைக்கப்படலாம் என்றும் பின்பு தங்க நிற விருப்பங்களை கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நாட்ச், பேஸ் ஐடி:

நாட்ச், பேஸ் ஐடி:

இதற்குமுன்பு வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஐபோன் மாடல்களில் நாட்ச், பேஸ் ஐடி சார்ந்த ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் புதிய ஏ12 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ்

ஆப்பிள் வாட்ச் சீரிஸ்

மேலும் விரைவில் வரும் ஐபோன் மாடல்களுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்துள்ளது, எனவே புதிய வாட்ச் மாடல்களில் பெரிய எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்பிளே வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக முந்தைய வாட்ச் சீரிஸ் 3 மாடல்களை விட 15சதவீதம் பெரியதாகவும், பின்பு டிஸ்பிளேவை சுற்றி மெல்லிய பெசல்களையும் கொண்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் அம்சங்கள்:

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் அம்சங்கள்:

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடல்களின் சிறப்பம்சங்கள் என்னவென்றால் அதிக விவரங்களை கொண்ட புதிள பேஸ் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. பேஸ் நேரத்தை சுற்றி குறிப்பிட்ட விவரங்களை காண்பிக்கும் வசதி கொண்டுள்ளது இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடல்கள். பின்பு இவற்றில் சைடு பட்டன் மற்றும் டிஜிட்டர் கிரவுன் இடையே புதிய ஓட்டை காணப்படுகிறது, இது இரண்டாவது மைக்ரோபோனாக இருக்கும் என கருதப்படுகிறது.

செப்டம்பர்:

செப்டம்பர்:

செப்டம்பர் 12-ம் தேதி ஆப்பிள் விழாவில் மூன்று புதிய ஐபோன் மாடல்கள், ஆப்பிள் வாட்ச் 4, ஆப்பிள் ஏர்பவர், ஏர்பாட்ஸ் 2 போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Leaked images of iPhone Xs and Apple Watch Series 4 surface: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X