ஐபோன்களுக்கு ஆப்பு ரெடி; See you soon என்று கலாய்க்கும் ஆப்பிள் வில்லன்.!

இப்போது அதே ஒன்ப்ளஸ் 6-ன் முழுமையான முன்பக்க வடிவமைப்பும், விபோ வலைத்தளம் வழியாக வெளியாகியுள்ளது.

|

ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிளின் "தொழில் எதிரி"யென பெயர் வாங்கி இருக்கும், ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமை ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ் 6, இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் அதன் சாத்தியமான வெளியீட்டை சந்திக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் ஒரு லீக்ஸ் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆன பீட் லாவ், கடந்த மாதம் ஒன்ப்ளஸ் 6-ன் வடிவமைப்பை வெளிப்படுத்தும் ஒரு சிறிய பகுதியை வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து இப்போது அதே ஒன்ப்ளஸ் 6-ன் முழுமையான முன்பக்க வடிவமைப்பும், விபோ வலைத்தளம் வழியாக வெளியாகியுள்ளது.

மெல்லிய அளவிலான பெஸல் வடிவமைப்பு

மெல்லிய அளவிலான பெஸல் வடிவமைப்பு

வெளியான லீக்ஸ் படத்தில் பிரபல கேமரா பெஞ்ச்மார்க் பிராண்ட் லோகோவான DxOMark இடம் பெற்றுள்ளதை காணமுடிகிறது. மேலும் ஒன்ப்ளஸ் 6, அதன் முன்பக்கத்தில் மிகவும் மெல்லிய அளவிலான பெஸல் வடிவமைப்பை கொண்டுள்ளதையும், கன்னப்பகுதி சற்று தடிமனாக இருப்பதும் காணமுடிகிறது.

வெளியீடு மிக தொலைவில் இல்லை

வெளியீடு மிக தொலைவில் இல்லை

ஸ்மார்ட்போனின் மேல்பக்கத்தில் எல்இடி நோட்டிபிகேஷன் லைட், ஓரு செல்பீ கேமரா மற்றும் ஒரு இயர்பீஸ் ஆகியவைகள் இடம்பெற்றுள்ளது. வெளியான புகைப்படத்தின் கீழே இடம் பெற்றிருக்கும் "விரைவில் சந்திக்கலாம்" என்கிற வாசகம், ஒன்ப்ளஸ் 6-ன் வெளியீடு மிக தொலைவில் இல்லை என்பதை குறிக்கிறது.

90%க்கும் அதிகமான ஸ்க்ரீன் டூபாடி விகிதம்

90%க்கும் அதிகமான ஸ்க்ரீன் டூபாடி விகிதம்

முன்னர் வெளியான ஒன்ப்ளஸ் 6-ன் புகைப்படமும், இந்த லீக்ஸ் புகைப்படமும் ஒரு சில ஒற்றுமைகளை கொண்டுள்ளது. அதாவது ஒன்ப்ளஸ் 6 ஆனது 18: 9 என்கிற திரை விகிதம் மற்றும் 90%க்கும் அதிகமான ஸ்க்ரீன் டூபாடி விகிதம் கொண்டிருக்கும் போன்ற அம்சங்களுடன் ஒற்றுப்போகின்றன.

நீலம், கருப்பு மற்றும் வெள்ளை

நீலம், கருப்பு மற்றும் வெள்ளை

அறியப்படாத சில புதிய விவரங்களை பொறுத்தவரை, ஒன்ப்ளஸ் 6 ஆனது நீலம், கருப்பு மற்றும் வெள்ளை - ஸ்மார்ட்போன் மூன்று வண்ணங்களில் வெளியாகலாம் மற்றும் தற்போதைய தலைமுறை ஸ்மார்ட்போன்களில் இருக்கும் உலோக கட்டமைப்பைப் போலல்லாமல், ஒரு கண்ணாடி பின்புற பலகத்தை கொண்டிருக்கலாம்.

முட்டை வடிவ கைரேகை ஸ்கேனர்

முட்டை வடிவ கைரேகை ஸ்கேனர்

பின்புறத்தை பொறுத்தவரை, கடந்த கால ஸ்மார்ட்போன்களை போல் இல்லாமல், எல்இடி ப்ளாஷிற்கு மேற்ப்பகுதியில் செங்குத்தாக சீரமைக்கப்பட்ட டூயல் கேமரா கொண்டிருக்கும். உடன் வித்தியாசமான முட்டை வடிவ கைரேகை ஸ்கேனர் ஒன்றும் இடம்பெறும்.

பிரதான அம்சங்கள்

பிரதான அம்சங்கள்

முன்னர் வெளியான தகவல்களை வைத்து, ஒன்ப்ளஸ் 6-ன் பிரதான அம்சங்களை கணிக்கமுடிகிறது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு, 6.23 அங்குல AMOLED டிஸ்ப்ளே, ஒரு 16MP + 20MP பின்புற கேமரா மற்றும் ஒரு 20MP செல்பீ கேமரா, CAT.16 கிகாபிட் LTE மோடம், டூயல்-பேண்ட் Wi-Fi 802.11ac, 3450mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ ஓஎஸ் ஆகியவைகளை கொண்டிருக்கும்.

Best Mobiles in India

English summary
Leaked Image Reveals Impressive Screen-to-Body Ratio for the OnePlus 6. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X