ஸ்மார்ட்போன் சண்டை : எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் லீ மேக்ஸ் 2!

Written By:

தரமுள்ள ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்குவது சிக்கல் நிறைந்த ஒன்றாகவே இருக்கின்றது. ஸ்மார்ட்போன் சந்தையில் எத்தனை புதிய அம்சங்கள் அறிமுகமானாலும் சரியான கருவியைத் தேர்வு செய்யும் போது குழப்பம் இருக்கத் தான் செய்கின்றது.

லீஇகோ நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை சூப்பர்போன் கருவி வெளியானதும் கருவிகளை ஒப்பீடு செய்வது எளிமையாகியுள்ளது என்றே கூறலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
திரை

திரை

5.7 இன்ச் டிஸ்ப்ளே 2560*1440 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட லீமேக்ஸ் 2 கருவியில் வீடியோ அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.

விர்ச்சுவல் ரியாலிட்டி

விர்ச்சுவல் ரியாலிட்டி

லீமேக்ஸ் 2 கருவியின் 2கே ரெசல்யூஷன் கொண்டிருப்பதால் விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோக்களை பார்க்க முடியும். சாம்சங் கேலக்ஸி எஸ்7 கருவியில் 5.1 டிஸ்ப்ளே, ஐபோன் 6எஸ் பிளஸ் 5.5 இன்ச் மற்றும் எச்டிசி 10 கருவியில் 5.2 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

லீமேக்ஸ் 2 கருவியில் 21 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ரோம் மெமரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்தனை அம்சங்களையும் சக்தியூட்ட 3100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

விலை

விலை

இந்திய சந்தையில் லீமேக்ஸ் 2 கருவியின் விலை ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Le Max2 Raises the bar for the Flagship Battle
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்