லீஈகோ லீ 1எஸ் : இது ஸ்மார்ட்போன் இல்லை, அதுக்கும் மேல.!!

Written By: Staff

லீஈகோ நிறுவனத்தின் லீ 1எஸ் கருவியானது முற்றிலும் மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்ட யூனி-பாடி டிசைன் கொண்டிருக்கின்றது. இத்தகைய டிசைன் அமைப்பு உலகளவில் சில பிரான்டுகள் மட்டுமே வழங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. விமானங்களில் பயன்படுத்தப்படும் அலுமினியம் மற்றும் மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டதோடு திருகாணி இல்லாமல் கட்டமைக்கப்பட்டுள்ளது இதன் வடிவமைப்பு தரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். உலகளவில் இந்தளவு நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட ஒரே கருவி இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லீ சூப்பர்போன் கருவியில் அழகான பெஸல் இல்லா வடிவமைப்பு, ஃப்ளோட்டிங் கிளாஸ் உள்ளிட்ட அம்சங்கள் தற்சமயம் விலை உயர்ந்த கருவிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மெலிவு

மெலிவு

லீ 1எஸ் கருவியானது 7.5எம்எம் மெலிதாக இருக்கின்றது. இது ரெட்மி நோட் 3 கருவியை விட 13% மெலிதாக இருப்பதோடு ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவியை விட 0.4எம்எம் மட்டுமே அதிகம் ஆகும்.

சிக்னல்

சிக்னல்

முற்றிலும் மெட்டல் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளதால் கருவியின் அழகு அதிகரிப்பதோடு சிறப்பான சிக்னல் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரை

திரை

இந்த சூப்பர்போன் புதிய தலைமுறை ஃப்ளோட்டிங் கிளாஸ் டிசைன் கொண்டிருப்பதால் திரையின் பாதுகாப்பை 70% உறுதியாக்குகின்றது. இதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளதால் திரையில் விரிசில் மற்றும் கீறல்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவே.

சார்ஜிங்

சார்ஜிங்

மேலும் இந்த கருவியில் வழங்கப்பட்டிருக்கும் டைப்-சி சார்ஜர் மூலம் கருவியை 5 நிமிடம் சார்ஜ் செய்து 3.5 மணி நேரம் டாக்டைம் பெற முடியும். மேலும் ரிவர்சபிள் யுஎஸ்பி டைப்-சி கனெக்டர் வயர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவதோடு, இவ்வகையானது சந்தையில் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விலை

விலை

இந்திய சந்தையில் ரூ.10,999க்கு கிடைக்கும் இந்த சூப்பர்போன் கொடுக்கும் விலைக்கு அதிக தரம், புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய அம்சங்களை வழங்குகின்றது. இந்த விலைப்பட்டியலில் இத்தகைய அம்சங்களை வேறு எந்த நிறுவனங்களும் இந்தியாவில் வழங்குவதில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

 

Read more about:
English summary
LeEco Le 1s: A budget smartphone with narrow screen bezel and premium specs
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot