உடனே வாங்க இத பாருங்க, லீ மேக்ஸ்2 ஓபன் சேல்.!!

By Meganathan
|

லீ இகோ நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்நிறுவனம் தனது இரண்டாம் கட்ட சுற்றுக்குத் தயாராகி இரண்டு புதிய கருவிகளை வெளியிட்டுள்ளது. அதன் படி அந்நிறுவனத்தின் லீ 2 மற்றும் லீ மேக்ஸ்2 ஒட்டு மொத்த ஸ்மார்ட்போன் சந்தையைத் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது.

விலை

விலை

லீ 2 கருவியானது பட்ஜெட் விலையிலும், லீ மேக்ஸ் 2 கருவி விலை உயர்ந்த ரகத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளாஷ் விற்பனையில் இரு கருவிகளும் நல்ல வரவேற்பையே பெற்றன. ப்ளிப்கார்ட் தளம் மூலம் விற்பனை செய்யப்படும் இரு கருவிகளுக்கும் பெரும்பாலான பயனர்கள் நல்ல மதிப்பெண்களையே வழங்கியிருக்கின்றனர்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

லீ இகோ லீ 2 கருவியில் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 பிராசஸர் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி, 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

மேலும் லீ 2 கருவியில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை, பெரிய கருவிகளில் மட்டும் வழங்கப்படும் இன்-செல் டிஸ்ப்ளே திரை வழங்கப்பட்டுள்ளது. லீ 2 கருவியில் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் அதிவேகமாகச் சார்ஜ் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர்

பிராசஸர்

லீ மேக்ஸ்2 கருவியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர், 4ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரு கருவிகளிலும் சிடிஎல்ஏ (CDLA-Continual Digital Lossless Audio) திறன் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தரம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்களும் இவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தரம் பயனர்களுக்குத் தொந்தரவு இல்லா இசையை அனுபவிக்க வழி செய்கின்றது.

திரைப்படம்

திரைப்படம்

லீ 2 மற்றும் லீ மேக்ஸ்2 கருவிகளை வாங்கும் பயனர்களுக்குச் சூப்பர்டெயின்மென்ட் திட்டத்தின் கீழ் 2000க்கும் அதிகமான திரைப்படங்களைப் பார்க்கும் வசதி, 1.9 மில்லியன் பாடல்கள், 3000 க்கு அதிகமான மணி நேர நிகழ்ச்சிகள் மற்றும் 150க்கும் அதிகமான தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வசதி வழங்கப்படுகின்றது. இந்தச் சேவையை வழங்க லீ இகோ நிறுவனம் ஈரோஸ், யுப் டிவி மற்றும் ஹங்காமா போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்கம் மேற்கொண்டுள்ளது.

பிளாஷ் விற்பனை

பிளாஷ் விற்பனை

லீ 2 மற்றும் லீ மேக்ஸ்2 கருவிகளுக்கு லீ இகோ நிறுவனம் இதுவரை இரண்டு முறை பிளாஷ் விற்பனை நடத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இனி லீ மேக்ஸ் 2 கருவிகளுக்குப் பிளாஷ் விற்பனை இல்லாமல் நேரடியாக வாங்கிக் கொள்ள முடியும் என அந்நிறுவனம் அதறிவித்துள்ளது.

சலுகை

சலுகை

லீ மேக்ஸ் 2 கருவிகளை வாங்கும் போது ரூ.1990 மதிப்புடைய சிடிஎல்ஏ ஹெட்போன், ப்ளிப்கார்ட் மூலம் வாங்கும் போது சிட்டி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10% கேஷ்பேக், ரூ.4,990 மதிப்புடைய ஒரு ஆண்டு லீ இகோ சந்தா, வோடாஃபோன் சேவையில் டபுள் டேட்டா போன்ற சலுகைகளைப் பெற முடியும்.

விற்பனை

விற்பனை

லீ 2 கருவிகளுக்கான மூன்றாவது பிளாஷ் விற்பனை ஜூலை 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெற இருக்கின்றது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி ஜூலை மாதம் 12 ஆம் தேதி காலை 11 மணி வரை நடைபெறும்.

சலுகை

சலுகை

லீ 2 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.4990 மதிப்புடைய ஒரு ஆண்டு லீ இகோ சந்தா, வோடாஃபோன் சேவையில் டபுள் டேட்டா போன்ற சலுகைகளைப் பெற முடியும்.

லீ மெயில்

லீ மெயில்

லீ 2 கருவியினை உடனே வாங்க லீ மெயில் மூலம் முன்பதிவு செய்திட இங்குக் கிளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
Le 2 to go on 3rd flash sale on July 12, Le Max2 now on open sale Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X