Lava சத்தமில்லாமல் செய்த வேலை இதுதான்! Lava Z93 வெளிவருமா வராதா?

|

லாவா நிறுவனம் சமீபத்தில் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ஸ்மார்ட்போன் பட்டியலில் லாவா இசட் 93 பிளஸ் அதன் முக்கிய விவரக்குறிப்புகளை விலை இல்லாமல் வெளிப்படுத்துகிறது. ஆனால், லாவா நிறுவனம் இப்போது அதன் லாவா இசட் 93 பிளஸ் பட்டியலிடப்பட்ட இடத்தை காலியாக வைத்துள்ளது. அதாவது, லாவா இசட் 93 பிளஸ் போனின் விளம்பரத்தை நிறுவனத்தின் இணையதள பட்டியலிலிருந்து நீக்கம் செய்துள்ளது.

ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதால், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது, ​​லாவா இசட் 93 பிளஸ் ஸ்மார்ட்போன் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டது, இதனால் வெளியீடு தாமதமாகும் என்று கருதுகிறோம்.

லாவா இசட் 93 பிளஸ்

லாவா இசட் 93 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு வண்ணங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய லாவா இசட் 93 ஸ்மார்ட்போன், 6.53' இன்ச் 1560 x 720 பிக்சல் கொண்ட எச்டி பிளஸ் வாட்டர் டிராப் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2.0GHz ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 2 ஜிபி / 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை கொடுக்கப்பட்டுள்ளது.

30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.! மகிழ்ச்சி.!30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.! மகிழ்ச்சி.!

ஆண்ட்ராய்டு 9.0 பை

ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் இயங்குகிறது, மேலும் இதில் 4000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. போனின் பின்புறத்தில், 16 மெகாபிக்சல் கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் கேமராவும், முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியின் பின் பேனலில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சமும் உள்ளது.

 4 ஜி வோல்டிஇ

இணைப்பு முன்னணியில், இதில் 4 ஜி வோல்டிஇ, டூயல் சிம், ப்ளூடூத் 4.2, வைஃபை 802.11 பி / ஜி / என், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. லாவா இசட் 93 ஸ்மார்ட்போன் 163.2 மிமீ x 77.8 மிமீ x 8.9 மிமீ அளவிடும், 186 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lava Z93 Plus removed from company’s website, Has Lava delayed the launch : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X