பட்ஜெட் விலையில் தெறிந்த ஸ்மார்ட்போன்.! இதுமேல வேற என்னவேணும்?
இந்தியாவில் லாவா நிறுவனம் மாறுபட்ட வகையில் தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. மேலும் மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு இந்த நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன் மாடல்களையும் அறிமுகம்
இந்தியாவில் லாவா நிறுவனம் மாறுபட்ட வகையில் தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது.
மேலும் மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு இந்த நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன் மாடல்களையும் அறிமுகம் செய்து வருகின்றது.

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் லாவா நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஏழை எளிய நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் இந்த நிறுவனம் தனது போன்களை அறிமுகம் செய்து வருகின்றது.
அதேபோல இந்த நிறுவனம் தற்போது பட்ஜெட் வகையில் மற்ற நிறுவனங்களையும் தெறிக்க விடும் வகையில் புதிய போனை அறிமுகம் செய்துள்ளது.

புதிய இசட் 81 சீரிஸ்:
லாவா நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இசட் சீரியஸ் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இட் 81 என அழைக்கப்படுகின்றது.

சிறப்பு:
லாவா நிறுவனத்தின் இசட் 81 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்டி பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ 22 எம்எம் குவாட்-கோம் பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி, ரேம், 12 எம்பி பிரைமரி மற்றும் செல்பி கேமரா, எல்இடி பிளாஷ், ஸ்டூடியோ மோட் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டி இருக்கின்றது.

கேமரா:
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஸ்டார் ஓ.எஸ். 5.0, டூயல் சிம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 13 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி.

கிடைக்கும் நிறங்கள்:
லாவா இசட்81 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிடைக்கும்:
பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் போன்ற ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கும். இதன் 2 ஜி.பி. வேரியன்ட் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications