டூயல் ரியர் கேமராவுடன் Lava Z71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! பட்ஜெட் விலை.!
லாவா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய லாவா இசெட்71 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வலைதளத்தில் விற்பனைக்கு விற்பனைக்கு வரும்.

அசத்தலான டிஸ்பிளே
லாவா இசெட்71 ஸ்மார்ட்போன் மாடல் 5.7-இன்ச் எச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது,பின்பு 720பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குவாட்-கோர் மீடியாடெக்
இந்த லாவா இசெட்71 ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 16என்எம் பிராசஸர்மற்றும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாகஇருக்கும்.

லாவா இசெட்71 கேமரா
லாவா இசெட்71 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா +2எம்பி செகன்டரி கேமரா என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள்இவற்றுள் அடக்கம்.

32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
லாவா இசெட்71 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்புகூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

லாவா இசெட்71 விலை
லாவா இசெட்71 3200எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது,பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட்,வைஃபை உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின்விலை ரூ.6,299-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications