மலிவு விலையில் Lava Z66 இந்தியாவில் அறிமுகம்! இது ஒரு 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு!

|

இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான லாவா தனது புதிய 'மேட் இன் இந்தியா' லாவா Z66 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் முற்றிலுமாக ஒரு இந்தியத் தயாரிப்பு என்றும் மலிவான விலையில் அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய லாவா Z66 ஸ்மார்ட்போன்

புதிய லாவா Z66 ஸ்மார்ட்போன்

புதிய லாவா Z66 ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் மற்றும் முழு விபரங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மலிவான விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றும் நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான நல்ல சாய்ஸ் ஆகும். இதன் விலை உண்மையில் நம்பமுடியாத மலிவான விலையில் அமைத்துள்ளது.

லாவா இசட் 66 சிறப்பம்சம்

லாவா இசட் 66 சிறப்பம்சம்

 • 6.08' இன்ச் கொண்ட எச்டி பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே
 • 2.5D கர்வுட் டிஸ்பிளே திரை
 • 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
 • ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஓஎஸ் (ஆண்ட்ராய்டு 10)
 • 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபிஸ்டோரேஜ்
 • எஸ்.டி கார்டு மூலம் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ்
 • அண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம்! நாசா சொன்ன பதில் இதுதான்!அண்டார்டிகாவில் திடீரென தோன்றிய ராட்சஸ ஏலியன் உருவத்தின் ஆதாரம்! நாசா சொன்ன பதில் இதுதான்!

  கேமரா
  • 13 எம்பி செல்பி கேமரா
  • 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா
  • எல்இடி ப்ளாஷ்
  • டூயல் சிம் ஆதரவு
  • புளூடூத் வி 4.2
  • ஓடிஜி
  • மைக்ரோ-யூ.எஸ்.பி
  • கைரேகை ஸ்கேனர்
  • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
  • 3950 எம்ஏஎச் பேட்டரி
  • லாவா இசட்66 பட்ஜெட் சாதனமாகும்

   அறிமுகம் குறித்து லாவா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமைத் தயாரிப்பாளர் தேஜீந்தர் சிங் கூறுகையில், "லாவா இசட்66 பட்ஜெட் பிரிவில் ஒரு சிறப்பான சாதனமாகும். இந்த அழகான சாதனம் மிகவும் பிரமிக்க வைக்கும் படங்களைக் கிளிக் செய்வதோடு மட்டுமல்லாமல், அனைத்து சுற்று செயல்திறனையும் நிரம்பிய சக்தியை வழங்குகிறது" என்று அவர் அறிமுகம் விழாவின் போது தெரிவித்துள்ளார்.

   Jio பயனர்கள் குஷி! ஜியோ தனது 5ஜி சேவையை சத்தமில்லாமல் துவங்க தயாராகிவிட்டது!Jio பயனர்கள் குஷி! ஜியோ தனது 5ஜி சேவையை சத்தமில்லாமல் துவங்க தயாராகிவிட்டது!

   லாவா இசட்66 ஸ்மார்ட்போன் விலை

   லாவா இசட்66 ஸ்மார்ட்போன் விலை

   புதிய லாவா இசட்66 ஸ்மார்ட்போன், இந்திய சந்தையில் வெறும் ரூ. 7,777 என்று விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மரைன் ப்ளூ, பெர்ரி ரெட் மற்றும் மிட்நைட் ப்ளூ ஆகிய மூன்று வண்ண வகைகளில் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் தற்போது ஆஃப்லைன் கடைகளிலிருந்து வாங்கக் கிடைக்கிறது, விரைவில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டிலும் வாங்கக் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Lava Z66 Officially Launched In India Know The Price, Specs And Features : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X