வெறும் ரூ.5000/-ல் நோக்கியாவிற்கு 'பல்ப்' கொடுத்த இந்திய ஸ்மார்ட்போன் பிராண்ட்.!

இசெட்50 என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகியுள்ள இக்கருவியானது இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் ஆகும்.

|

மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் மற்றும் கடும் போட்டிகளுக்கு மத்தியில் பிரபல நோக்கியா, இசெட்டிஇ மற்றும் அல்காடெல் ஆகிய நிறுவனங்களின் ஆண்ட்ராய்டு கோ பதிப்பு ஸ்மார்ட்போன்கள் ஆனது பார்சிலோனாவில் நிகழ்ந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018-ல் வெளிப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்ட்ராய்டு கோ பதிப்பு போட்டியில் சற்றும் எதிர்பாராமல் இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லவா இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனமும் பங்குகொண்டது. அதோடு மட்டுமின்றி நோக்கியா உட்பட இதர அனைத்து பிரபலமான நிறுவனங்களையும் மிஞ்சி இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனையும் அறிவித்தது.

வருகிற மார்ச் மாதம் 15 அன்று

வருகிற மார்ச் மாதம் 15 அன்று

இசெட்50 என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகியுள்ள இக்கருவியானது இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் ஆகும் மற்றும் இது வருகிற மார்ச் மாதம் 15 அன்று, 100,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடம் ரூ.5,000/- என்கிற விலைப்புள்ளியில் வாங்க கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்)

ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்)

லாவா இசெட்50 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், நிச்சயமாக ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) கொண்டு இயங்குகிறது. இது குறைந்த-கட்டமைப்புகள் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கான மேம்படுத்தப்பட்டதொரு பதிப்பாகும்.

குறைவான தரவை மற்றும் இடத்தை உட்கொள்ளும்

குறைவான தரவை மற்றும் இடத்தை உட்கொள்ளும்

ஆக இதில் கூகுள் ஆஃப்ஸ்களை பதிவிறக்கம் செய்ய முடியாத என்கிற அச்சம் கொள்ள வேண்டாம். பெயருக்கு ஏற்றபடியே கூகுள் பயன்பாடுகளின் லைட் பதிப்புகளை இதனால் இயக்க முடியும். லைட் பதிப்புகளானது வேகமாக இன்ஸ்டால் ஆகும் மற்றும் குறைவான தரவை மற்றும் இடத்தை உட்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அசிஸ்டென்ட் கோ, மேப்ஸ் கோ, ஜிமெயில் கோ மற்றும் யூட்யூப் கோ

அசிஸ்டென்ட் கோ, மேப்ஸ் கோ, ஜிமெயில் கோ மற்றும் யூட்யூப் கோ

அதாவது கூகுள் அசிஸ்டென்ட், கூகுள் மேப்ஸ், ஜிமெயில் மற்றும் யூட்யூப் போன்ற வழக்கமான கூகுள் பயன்பாடுகளுக்குப் பதிலாக, லாவா இசெட்50 ஆனது முறையே அசிஸ்டென்ட் கோ, மேப்ஸ் கோ, ஜிமெயில் கோ மற்றும் யூட்யூப் கோ போன்ற மாற்று லைட் பயன்பாடுகளை கொண்டுவரும்.

1ஜிபி ரேம்

1ஜிபி ரேம்

வன்பொருள் அடிப்படையில், இசெட்50 ஆனது ஒரு பொதுவான பட்ஜெட் ஸ்மார்ட்போன் கொண்டுள்ள அம்சங்களை கொண்டுள்ளது. இது 1ஜிபி ரேம் உடன் இணைந்த மீடியாடெக் நுழைவு நிலை எம்டி6737எம் செயலி கொண்டு இயங்குகிறது.

4.5 இன்ச் டிஸ்ப்ளே

4.5 இன்ச் டிஸ்ப்ளே

மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய விருப்பத்துடன் 8ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பி கொண்டுள்ளது. மற்றும் சாதாரண பயனர்களுக்கு போதுமானதாக உள்ள ஒரு 4.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, அது 854x480பி என்கிற தீர்மானம் கொண்டுள்ளது.

ரூ.5,000/- என்கிற சூப்பர் பட்ஜெட் விலையில் கிடைக்கும்

ரூ.5,000/- என்கிற சூப்பர் பட்ஜெட் விலையில் கிடைக்கும்

கூகுள் நிறுவனமானது அதன் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்கள் சிலவற்றிற்கு சுமார் ரூ.3,247/- செலவாகும் என்று உத்தரவாதம் அளித்துள்ளது. இது ஆண்ட்ராய்டு கோ சாதனங்கள் மீது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமொரு விலை புள்ளியாகும். அதன் அடிப்படையில் பார்த்தால் லாவா இசெட்50 ஆனது ரூ.5,000/- என்கிற சூப்பர் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் என்றே கூறலாம்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
ஆர்வம்

ஆர்வம்

லாவா நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களில், மைக்ரோமேக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு கோ பதிப்பு ஸ்மார்ட்போன்கள் மீது ஆர்வம் காட்டி வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Lava Z50 is the first Android Go smartphone in India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X