நோக்கியா 1-க்கு வெறும் ரூ.4,400/-க்கு "வேட்டு வைத்த" இந்திய நிறுவனம்.!

இந்திய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் வழங்கும் சலுகையின்கீழ் இக்கருவியை வெறும் ரூ.2,400/-க்கு வாங்கலாம்.

|

லாவா நிறுவனம் அதன் இசெட் 50 என்கிற ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.4,400/- ஆகும். இருப்பினும் இந்திய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் வழங்கும் சலுகையின்கீழ் இக்கருவியை வெறும் ரூ.2,400/-க்கு வாங்கலாம்.

நோக்கியா 1-க்கு வெறும் ரூ.4,400/-க்கு

அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் "மேரா பெஹலா ஸ்மார்ட்போன்" என்கிற முன்முயற்சியின் ஒரு பகுதியாக லாவா இசெட்50 ஸ்மார்ட்போன் மீது ரூ.2,000/- என்கிற கேஷ்பேக் கிடைக்கும். ஏற்கனவே கருப்பு மற்றும் கோல்ட் வண்ண மாறுபாடுகளில், சுமார் 1,00,000க்கும் மேற்பட்ட சில்லறை கடைகளில் வாங்க கிடைக்கும் லாவா இசெட்50 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்ன.? எந்தெந்த இ-காமர்ஸ் வலைத்தளங்களில் வாங்க கிடைக்கிறது.? குறிப்பாக நோக்கியா 1 ஸ்மார்ட்போனுடன் இக்கருவி நிகழ்த்தும் மோதல் என்ன என்பதை பற்றி விரிவாக காண்போம்.

லாவா இசெட் 50 அம்சங்கள்.!

லாவா இசெட் 50 அம்சங்கள்.!

லாவா நிறுவனத்தின்படி, ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற இ-காமர்ஸ் வலைத்தளங்களில் லாவா இசெட்50 வாங்க கிடைக்கும். அம்சங்களை பொறுத்தமட்டில், லாவா இசெட்50 ஆனது ஒரு 2.5டி கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு உடனான 4.5 அங்குல எப்டபிள்யூவிஜிஏ (FWVGA) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஓரு மீடியா டெக்எம்டி6737எம் செயலி மற்றும் க்வாட்-கோர் ப்ராசஸர் உடனான 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஆப்ஸ்களுமே கோ எடிஷன் பதிப்பு.!

அனைத்து ஆப்ஸ்களுமே கோ எடிஷன் பதிப்பு.!

இதுவொரு ஆண்ட்ராய்டு ஓரியோ ஸ்மார்ட்போன் என்பதால், சிஸ்டம் பைல்களுக்கான மிக குறைவான சேமிப்பகத்தையே எடுத்துகொள்ளும். இதன் 8ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பில் 5.5ஜிபி அளவிலான இடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இக்கருவி கொண்டுள்ள அனைத்து ஆப்ஸ்களுமே கோ எடிஷன் பதிப்பு என்பதால் ரேம் சேமிப்பகத்திலும், குறைந்தஅளவையே பயன்படுத்துகிறது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒரு எல்இடி ப்ளாஷ் கொண்ட 5எம்பி பின் மற்றும் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

பொக்கே விளைவு முறை இடம்பெற்றிருப்பது ஆச்சரியம்.!

பொக்கே விளைவு முறை இடம்பெற்றிருப்பது ஆச்சரியம்.!

இதன் 5எம்பி கேமராவில் புகைப்படத்தின் பின்னணியை மங்கலாக்கும் பொக்கே விளைவு முறை இடம்பெற்றிருப்பது ஆச்சரியம். மேலும், ஸ்மார்ட்போன் ஹிந்தி உட்பட பத்து முக்கிய இந்திய மொழிகளையும் ஆதரிக்கிறது. இரண்டு வருட உத்தரவாதத்துடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஒரு வருடத்திற்குள்ளான இலவச ஒன்-டைம் ஸ்க்ரீன் ரிப்ளேஸ்மென்ட் (ஒருமுறை திரை மாற்று) வாய்ப்பையும் வழங்குகிறது.

அந்த மூன்று கருவிகள்.!?

அந்த மூன்று கருவிகள்.!?

ஆல்காடெல் 1எக்ஸ் சாதனத்திற்குப் பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் லாவா இசெட்50 தான் என்பது ஒருபக்கமிருக்க, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நோக்கியா 1 ஸ்மார்ட்போனும் ஓரியோ கோ எடிஷன் பதிப்பின் கீழ் தான் இயங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

How to Find a domain easily for your business (TAMIL)
நோக்கியா 1 அம்சங்கள்.!

நோக்கியா 1 அம்சங்கள்.!

உலகளாவிய விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் சுமார் ரூ.5,500/- இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நோக்கியா 1 ஆனது விலைக்கேற்ற நுழைவு-நிலை வன்பொருள் அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது, 480 × 85 பிக்சல் தீர்மானம் கொண்ட 4.50 இன்ச் தொடுதிரைத்திரைடன் கூடிய டிஸ்பிளே, 1.1ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எம்டி6737எம் செயலி, 1ஜிஜி ரேம், மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி சேமிப்பு, 5எம்பி பின்பக்க கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா, 2150எம்ஏஎச் நீக்கக்கூடிய பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lava Z50 Android Oreo (Go Edition) Smartphone Launched in India at an Effective Price of Rs 2,400. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X