Home
Mobile

ட்ரிபிள் ரியர் கேமரா.. பெரிய டிஸ்பிளே.. வருகிறது புதிய லாவா போன்.. எந்த மாடல்?

லாவா நிறுவனம் தொடர்ந்து கம்மி விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் 5ஜி போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் லாவா நிறுவனம் விரைவில் லாவா இசட் 4 பிளஸ் என்ற புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளது.

குறிப்பாக இந்த போன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் லாவா இசட் 4 பிளஸ் (Lava Z4 Plus) போனின் டிசைன் மறறும் சில விவரக்குறிப்புகள் அன்லைனில் வெளியாகி உள்ளது. அதாவது லாவா இசட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ட்ரிபிள்  ரியர் கேமரா.. பெரிய டிஸ்பிளே.. வருகிறது புதிய லாவா போன்..

அதேபோல் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த லாவா இசட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இதில் 50எம்பி மெயின் கேமரா உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4000 எம்ஏச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது லாவா இசட் 4 பிளஸ் போன். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 7.5 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

இதுதவிர பவர் பட்டன்கள் மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் இந்த போனின் வலது பக்கத்தில் உள்ளன. பின்பு 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். தற்போது லாவா இசட் 4 பிளஸ் போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி(Lava Blaze Pro 5G) போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி போனில் 6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16.5 மில்லியன் கலர் சப்போர்ட் வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த லாவா போன் ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் கொண்டுள்ளது. அதோடு மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த கேமராவில் எச்டி (HD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. அதோடு 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் ஃபிலிம், ஸ்லோவ் மோஷன், டைம் லேப்ஸ், பியூட்டி, எச்டிஆர், நைட், போர்ட்ராய்டு போன்ற பல்வேறு மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) வருகிறது.

ட்ரிபிள்  ரியர் கேமரா.. பெரிய டிஸ்பிளே.. வருகிறது புதிய லாவா போன்..

லாவா பிளேஸ் ப்ரோ மாடலில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்ய 78 நிமிடங்கள் போதுமானதாகும். இந்த பேட்டரி 30 மணி நேர டாக்டைம் பேக்கப் மற்றும் 510 நிமிடங்கள் வீடியோ பிளேபேக் டைம் கொடுக்கக்கூடியது. இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் வருகிறது.

இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரை, 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி (Dual 4G), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.10 (Bluetooth 5.10) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவை வருகின்றன.இந்த லாவா மாடல் ஸ்டார்ரி நைட் (Starry Night) மற்றும் ரேடியண்ட் பேர்ல் (Radiant Pearl) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இவ்வளவு அம்சங்களைக் கொண்ட இந்த போனின் விலை மிகவும் மலிவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலை வெறும் ரூ.12,499க்கு வாங்கிக்கொள்ளலாம்.

அமேசான் (Amazon), லாவா இந்தியா (Lava India) மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் லாவா பிளேஸ் ப்ரோ விற்பனைக்கு வருகிறது. வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Z4 Plus design and specifications leaked online: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X