Home
Mobile

சீன மொபைல்களுக்கு ரிவிட் அடிக்கும் இந்திய நிறுவனம்.. 4950mAh பேட்டரி.. ட்ரிபிள் கேமரா.. எந்த போன்?

இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் லாவா நிறுவனம் தனது லாவா யுவா 3 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது லாவா நிறுவனம்.

அதாவது இந்திய நிறுவனமான லாவா தனது லாவா இசட்34 எனும் ஸ்மார்ட்போனை தான் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக சீன நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இந்த லாவா இசட்34 போன் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

சீன மொபைல்களுக்கு ரிவிட் அடிக்கும் இந்திய நிறுவனம்.!

லாவா இசட்34 அம்சங்கள் (Lava Z34 specifications): ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த லாவா இசட்34 ஸ்மார்ட்போன். குறிப்பாக 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த லாவா இசட்34 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வசதியுடன் லாவா இசட்34 போன் அறிமுகமாகும். பின்பு பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே, 4950எம்ஏஎச் பேட்டரி (4950mAh battery), 10W சார்ஜிங், மீடியாடெக் ஜி35 ( MediaTek G35) சிப்செட், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் லாவா இசட்34 போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட லாவா யுவா 3 போன் ஆனது ரூ.6,799 விலையில் விற்பனைக்கு வந்தது. இப்போது லாவா யுவா 3 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

லாவா யுவா 3 அம்சங்கள்(Lava Yuva 3 Specifications): 6.5 இன்ச் பன்ஞ் ஹோல் (Punch Hole) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த போன். இந்த டிஸ்பிளேவில் 1600 × 720 பிக்சல்கள், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 269 PPI பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆக்டா கோர் யுனிசோக் டி606 (Octa Core Unisoc T606 )சிப்செட் கொண்டுள்ளது லாவா யுவா 3 ஸ்மார்ட்போன். பின்பு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13), மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த லாவா யுவா 3 ஸ்மார்ட்போன்.

சீன மொபைல்களுக்கு ரிவிட் அடிக்கும் இந்திய நிறுவனம்.!

13 எம்பி மெயின் கேமரா + ஏஐ (AI) லென்ஸ் + விஜிஏ (VGA) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ள இந்த போன்.இந்த கேமராவில் எச்டிஆர் (HDR), போர்ட்ராய்டு (Portrait), ஏஐ (AI), நைட் (Night), ப்ரோ (Pro), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), டைம் லேப்ஸ் (Timelapse) போன்ற பீச்சர்கள் வருகின்றன. அதேபோல் 5எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த லாவா யுவா 3 போன்.

லாவா யுவா 3 போனில் 5000mAh பேட்டரி வருகிறது. பின்பு இதனுடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. டைப்-சி கேபிள் (Type-C Cable) சப்போர்ட், சைடு ஃபிங்கர்பிரின்ட் சென்சார் (Side Fingerprint Sensor) போன்ற பல சிறப்பான வசதிகள் இதில் உள்ளது. குறிப்பாக கம்மி விலையில் இந்த ஸ்மார்ட்போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Lava Z34 key specs and design released online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X