Home
Mobile

5000 எம்ஏஎச் பேட்டரியுடன் லாவா Z3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

லாவா நிறுவனம் புதிய லாவா Z3 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனத்தின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

லாவா Z3 ஸ்மார்ட்போன்

லாவா Z3 ஸ்மார்ட்போன்

லாவா Z3 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், கொரில்லா கிளாஸ் 3, 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

 Z3 ஸ்மார்ட்போனில் குவாட்-கோர்

இந்த லாவா Z3 ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ 20 பிராசஸர் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லாவா Z3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி

லாவா Z3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி பிரைமரி கேமரா+ செகண்டரி லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த லாவா Z3 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லாவா Z3 ஸ்மார்ட்போனில் 5000

லாவா Z3 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு கைரேகை சென்சார்
உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ட் டைப்-சி போர்ட் உள்

வைஃபை, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், சார்ஜ் செய்வதற்கான யுஎஸ்பி போர்ட் டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லாவா Z3ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக Striped Blue மற்றும்Striped Cyanநிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் எடை 192 கிராம் ஆகும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Z3 with Helio A20 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X