பட்ஜெட் விலையில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் Lava Z3 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
லாவா நிறுவனம் புதிய லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு720 x 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

புதிய லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போன் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ 25 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு இந்தஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் பியூட்டி மோட், எச்டிஆர் மோட், நைட் மோட் மற்றும் போர்ட்ரெய்ட் மோட் எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஸ்டிரிப்ட் ப்ளூ, ஸ்டிரிப்ட் சியான் நிறங்களில் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் எடை 192 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் எனப் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனத்தில் பேஸ் அன்லாக் இருப்பது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

லாவா இசட்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,499-ஆக உள்ளது. தற்போது இந்தியாவில் லாவாவின் ஆன்லைன் ஸ்டோரில் இந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்கலாம்


Click it and Unblock the Notifications