Home
Mobile

யாரு சாமி அவன்.. ரூ.7,499 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 90Hz டிஸ்பிளே.. 8GB ரேம்.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

இந்தியா ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பட்ஜெட் விலையில் லாவா யுவா ஸ்டார் 3 (Lava Yuva Star 3) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடிமட்ட விலையில் 5000mAh பேட்டரி, 90Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, IP64 ரேட்டிங் போன்ற பீச்சர்களை கொடுத்துள்ளது. இந்த லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு நிகராக உள்நாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா மொபைல்ஸ் பட்ஜெட் விலை மாடல்களை களமிறக்கி வருகிறது. இதில் லாவா யுவா சீரிஸ் மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போன் பிரீமியம் லுக் கொண்ட பட்ஜெட் மாடலாக வந்துள்ளது.

யாரு சாமி அவன்.. ரூ.7,499 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 90Hz டிஸ்பிளே!

லாவா யுவா ஸ்டார் 3 அம்சங்கள் (Lava Yuva Star 3 Specifications): ஆக்டா கோர் யுனிசோக் எஸ்சி9863ஏ (Octa Core Unisoc SC9863A) சிப்செட்டை இந்த லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ஐஎம்ஜி8322 ஜிபியு (IMG8322 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் (Android 15 Go Edition) கொடுத்து உள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மட்டுமல்லாமல், 512 ஜிபி மெமரியை பயன்படுத்தி கொள்ளும்படி மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual SIM Nano Slot) கொடுக்கப்பட்டு உள்ளது. 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே உள்ளது.

எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்துள்ளது. மலிவு விலை மாடலாக இருப்பதால், பஞ்ச்-ஹோல் டிசைன் (Punch-hole Design) கிடைக்காது. வாட்டர் டிராப் நாட்ச் (Water Drop Notch) மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது.

13 எம்பி மெயின் கேமராவை இந்த லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கிடைத்துள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட் விலை மாடலா இருப்பதால், பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) உள்ளது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரியை இந்த லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த பேட்டரியுடன் 8.5 எம்எம் தடிமன் மற்றும் 193.7 கிராம் எடையை கொண்டுள்ளது. ஆகவே, லைட் வெயிட் மாடலாக கிடைக்க இருக்கிறது.

ஆக்டா கோர் யுனிசோக் எஸ்சி9863ஏ சிப்செட்டை கொண்டிருப்பதால், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி மட்டுமே கிடைக்கிறது. மேலும், வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 4.2 (Bluetooth 4.2) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டியை கொடுத்துள்ளது. டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கிடைத்து உள்ளது.

இன்டஸ் பிளாக் (Indus Black) மற்றும் சியாச்சின் ஒயிட் (Siachen White) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.7,499 ஆக இருக்கிறது. 1 வருட வாரண்டி மற்றும் இலவச ஹோம் சர்வீஸ் கொடுக்கப்படுகிறது. மார்ச் முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பிளிப்கார்ட், அமேசான் தளங்களிலும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Yuva Star 3 With 5000mAh Battery 13MP Camera Launched Under Rs 8000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X