சைனீஸ் போன்களை நூடுல்ஸ் போட்ட இந்திய பிராண்ட்.. ஆளுக்கு 2 வாங்கும் விலையில் புதிய LAVA போன்.. எந்த மாடல்?
பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கு பெயர்போன இந்திய நிறுவனம் ஆன லாவா (LAVA), அதன் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தாயாராகி வருகிறது. இந்நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் மாடல் ஆக லாவா யுவா ஸ்டார் 3 (Lava Yuva Star 3) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது
YTECHB வழியாக லீக் ஆன ஒரு புகைப்படம் ஆனது - லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போன் ஆனது மென்மையான கர்வ்டு எட்ஜ்களுடன் மேட் பிளாக் கலர் பினிஷை கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் மேல்-இடதுபுறத்தில் ஒரு வட்டமான செவ்வக கேமரா ஐலேண்ட்டையும் காண முடிகிறது. அதில் செங்குத்தாக அடுக்கப்பட்ட இரண்டு சர்குலர் கேமரா ரிங்களை பார்க்க முடிகிறது.

மேலே உள்ள லென்ஸின் வலதுபுறத்தில் ஒரு LED ஃபிளாஷும் உள்ளது. அதே நேரத்தில் மாட்யூலில் உள்ள டெக்ஸ்ட் ஆனது 13-மெகாபிக்சல் ஏஐ கேமரா செட்டப்பை குறிக்கிறது. ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில், வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டனையும் காண முடிகிறது. பிளாக் கலர் ஆப்ஷனை தவிர லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போனானது இன்னும் அதிக கலர் ஆப்ஷன்களில் வர வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
ஆனால் இப்போதைக்கு இது எப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்பது குறித்த லான்ச் டைம்லைன் மற்றும் லான்ச் டேட் எதுவும் வெளியாகிவிலை. இது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் லாவா யுவா ஸ்டார் 2 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த மே 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
நீண்ட இடைவெளி ஆகிவிட்டதால், இதன் அறிமுகம் விரைவில் நடக்கலாம். பெரும்பாலும் விலை ரூ.10,000 க்குள் தான் இருக்கும். ஏனென்றால் லாவா யுவ ஸ்டார் 2 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7499 க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது. ஆக லாவா யுவா ஸ்டார் 3 மாடலில் எவ்வளவு பெரிய அப்கிரேட்கள் செய்யப்பட்டாலும், விலை ரூ.10,000 பட்ஜெட்டை தாண்ட வாய்ப்பில்லை.
முன்னதாக இந்தியாவில் அறிமுகமான லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- ஸ்டாக் ஆண்ட்ராய்டு 15 கொண்டு இயங்குகிறது. இது மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2400 நிட்ஸ் லோக்கல் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 446 பிபிஐ டென்சிட்டி உடனான 6.67-இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளே
- லாவாவின் கூற்றுப்படி முன்பக்கத்தில் 1.7 மிமீ சம பக்க பெசல்கள் மற்றும் பின்புறத்தில் ஒரு மேட் ஏஜி கிளாஸுடன் கூடிய அலுமினியம் அலாய் மெட்டல் பிரேமை கொண்டுள்ளது.
- மேம்பட்ட டிராப் பாதுகாப்பிற்காக சூப்பர் ஆன்டி-ட்ராப் டயமண்ட் பிரேம், ஸ்க்ரீனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் மற்றும் ஐபி64 தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பு மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.
- வெட் டச் கண்ட்ரோல் அம்சம்: இது ஈரமான அல்லது எண்ணெய் நிறைந்த கைகளுடன் கூட ஸ்க்ரீனை பயன்படுத்த அனுமதிப்பதாக கூறப்படுகிறது.
- மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8GB LPDDR5X ரேம் மற்றும் 256GB UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
- ஹீட்டிங்கை நிர்வகிப்பதற்காக 4,300 சதுர மிமீ வெப்ப சிதறல் பகுதியுடன் கூடிய விசி லிக்விட் கூலிங் சிஸ்டமை கொண்டுள்ளது
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.88 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50-மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
- செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) உடனான 50-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டும் 4K 60fps வரை வீடியோ பதிவை ஆதரிக்கின்றன
- லாவாவின் சொந்த வாயு ஏஐ (LAVA Vayu AI). இதன் கீழ் பல வகையான ஏஐ அம்சங்கள் அணுக கிடைக்கும்.
- 66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி: இது 19 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகும் என்று லாவா நிறுவனம் கூறுகிறது.
- பாதுகாப்பிற்காக இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஃபேஸ் அன்லாக்
- ஆப் லாக்
- ஆன்டி-தெஃப்ட் அலாரம்
- ஆன்டி-பீப்பிங்
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6இ, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி 3.2 டைப்-C மற்றும் ஐஆர் பிளாஸ்டர்
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோஃபோனையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








