மார்க்கெட்டே திணறப்போகுது.. அடுத்த லாவா 5ஜி போன் ரெடி.. டூயல் ரியர் கேமரா.. எந்த மாடல்?
லாவா நிறுவனம் அடுத்து லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும்.
லாவா யுவா ஸ்டார் 3 அம்சங்கள் (Lava Yuva Star 3 Specifications): எல்இடி பிளாஸ் உடன் 13எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது.

பெரிய டிஸ்பிளே, மீடியாடெக் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அம்சங்களும் அறிமுகமாகும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி அம்சங்கள் (Lava Blaze Duo 3 5G Specifications): புதிய லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதி உள்ளது. அதேபோல் இந்த போனில் சிறிய 1.6-இன்ச் செகண்டரி AMOLED டிஸ்பிளேவும் உள்ளது.
சிறிய டிஸ்பிளே குவிக் நோட்டிஃபிகேஷன், விட்ஜெட்டுகள், மியூசிக் கண்ட்ரோல் மற்றும் மெயின் கேமராவுடன் செல்ஃபி ஃப்ரேமிங் செய்வதற்கும் கூட வடிவமைக்கப்பட்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 7060 சிப்செட்(MediaTek Dimensity 7060 chipset) உடன் இந்த புதிய லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி போனின் பின்புறம் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்752 பிரைமரி கேமரா உள்ளது. இதன் மூலம் 2கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் ஏஐ அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
அதுவும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speaker) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த லாவா ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.

அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லாவா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
லாவா பிளேஸ் டூயோ 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். 5ஜி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ரூ.16,999 விலையில் லாவா பிளேஸ் டூயோ 5ஜி போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








