ஆளுக்கு 2 ஆர்டர்.. வெறும் ரூ.6,499 போதும்.. 5000mAh பேட்டரி.. AI கேமரா.. 8GB ரேம்.. 10W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஆளுக்கு 2 ஆர்டர் போடும்படியான பட்ஜெட்டில் 5000mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங், 8 ஜிபி ரேம், ஏஐ கேமரா போன்ற பீச்சர்களை கொண்ட லாவா யுவா ஸ்டார் 2 (Lava Yuva Star 2) போன் வெளியாகி இருக்கிறது. இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் எந்த சிப்செட் கொடுக்கிறது? கனெக்டிவிட்டி பீச்சர்கள் எப்படி? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சீன ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான பீச்சர்களுடன் இந்தியாவின் லாவா நிறுவனத்தின் மாடல்கள் வெளியாகி வருகின்றன. ரூ.10,000 பட்ஜெட்டில் ரூ.20,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் பீச்சர்கள் வருவதால், மார்கெட்டில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. இப்போது, பிரீமியம் டிசைனில் லாவா யுவா ஸ்டார் 2 மாடலை களமிறக்கி இருக்கிறது.

ரூ.10,000 பட்ஜெட் கூட இல்லாமல், அதைவிட மலிவான விலைக்கு இந்த லாவா போன் வெளியாகி இருக்கிறது. இப்போது, ரீடெயில் அவுட்லெட்களில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் தளங்களில் விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த லாவா யுவா ஸ்டார் 2 போனின் பீச்சர்களை முதலில் தெரிந்து கொள்ளலாம்.
லாவா யுவா ஸ்டார் 2 அம்சங்கள் (Lava Yuva Star 2 Specifications): இந்த லாவா போனானது அடிமட்ட பட்ஜெட்டில் கிடைப்பதால், அதற்கு ஏற்ப சிப்செட் மற்றும் ஓஎஸ் அவுட்புட் கொடுக்கிறது. ஆகவே, இதில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கோ எடிஷன் (Android 14 Go Edition) மற்றும் ஆக்டா கோர் யுனிசோக் (Octa Core UNISOC) சிப்செட் கிடைக்கிறது.
இதற்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் மட்டுமே எதிர்பார்க்க முடியும். டிசைனுக்கும் விலைக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லும்படி டிசைனில் பிரீமியம் காட்டி இருக்கிறது. மெட்டாலிக்-லைக் ஃபினிஷிங் கொண்ட மிடில் ஃபிரேம் மற்றும் குளோசி பேக் பேனல் கொடுக்கிறது. ரேடியண்ட் பிளாக் (Radiant Black) மற்றும் ஸ்பார்க்லிங் ஐவரி (Sparkling Ivory) கலர்களில் வருகிறது.
இந்த லாவா யுவா ஸ்டார் 2 போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 512 ஜிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. இந்த சிலாட்டுடன் டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா + ஏஐ செகண்டரி லென்ஸ் உள்ளது.
இந்த டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், 5 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுக்கிறது. பேக்கப் சிஸ்டம் பக்காவாகவே இருக்கிறது. ஏனென்றால், இந்த பட்ஜெட்டில் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்காது. ஆனால், இந்த லாவா யுவா ஸ்டார் 2 போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதற்காக 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அடிமட்ட பட்ஜெட்டில் கிடைக்கும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. இந்த லாவா யுவா ஸ்டார் 2 போனில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual4G VoLTE), ப்ளூடூத், ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி வருகிறது.
இந்த போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.6,499ஆக இருக்கிறது. இதே விலையில் ரீடெயில் அவுட்லெட்களில் கிடைக்கிறது. ஆன்லைன் ஸ்டோர்களில் ஓரிரு வாரங்களில் எதிர்பார்க்கலாம். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்கள் மற்றும் பட்ஜெட்டைவிட கூடுதலாக பிரீமியம் லுக்கை இந்த லாவா கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications