Home
Mobile

ஆளுக்கொரு ஆர்டர்.. ரூ.6000 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. AI கேமரா.. 10W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் அடிமட்ட பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்களை கொண்டுவரும் சீன நிறுவனங்களுக்கு கொஞ்சமும் குறையில்லாமல், உள்நாட்டின் லாவா நிறுவனம் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. இப்போது, வெறும் ரூ.6000 பட்ஜெட்டில் 5000mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங், ஏஐ கேமரா, 6 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும்படி லாவா யுவா ஸ்மார்ட் (Lava Yuva Smart) போனை கொடுத்து இருக்கிறது. இந்த லாவாவின் விவரங்கள் இதோ.

லாவா ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் வெளியாகினாலும், பிரீமியம் டிசைன், கர்வ்ட் டிஸ்பிளே போன்ற அவுட்டர் லுக்கில் தனி கவனம் செலுத்தி வருகிறது. இதனாலேயே, பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களிடம் தவிர்க்க முடியாத பிராண்ட்டாக மாறி வருகிறது. இந்த லாவா யுவா ஸ்மார்ட் போனும் அப்படியே டிசைனில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது.

ஆளுக்கொரு ஆர்டர்.. ரூ.6000 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. AI கேமரா மாடல்!

டூயல் கேமரா பம்ப் மற்றும் குளோசி பேக் பேனல் கொடுக்கிறது. கேமரா பம்ப் கிளிட்டரிங் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. முன்பக்கம் வாட்டர்-டிராப் நட்ஜ் டிசைனில் கேமரா ஷூட்டர் இருக்கிறது. குளோசி ப்ளூ (Glossy Blue), குளோசி ஒயிட் (Glossy White) மற்றும் குளோசி லாவெண்டர் (Glossy Lavender) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

லாவா யுவா ஸ்மார்ட் அம்சங்கள் (Lava Yuva Smart Specifications): ரூ.6000 பட்ஜெட்டில் கிடைக்க இருப்பதால், அதற்கு ஏற்ப பீச்சர்களும் இருக்கின்றன. ஆனால், இதில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கோ எடிஷன் (Android 14 Go Edition) வரவேற்க தக்க பீச்சராகும். அதேபோல 10W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. எல்சிடி (LCD) பேனல் கிடைக்கிறது.

6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்) டிஸ்பிளே இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2.5டி கிளாஸ் டிசைன் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் பெற்று கொள்ளலாம். இந்த லாவா யுவா ஸ்மார்ட் மாடலில் 3 ஜிபி ரேம் + 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது. ஆகவே, 6 ஜிபி ரேம் மற்றும் + 64 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

இதுபோக 512 ஜிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கோ எடிஷன் கொண்ட 28என்எம் யுனிசோக் 9863ஏ ஆக்டா கோர் (28nm UNISOC 9863A Octa Core) சிப்செட் கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமராவுடன் ஏஐ செகண்டரி கேமரா வருகிறது. ஆகவே, டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது.

இந்த லாவா யுவா ஸ்மார்ட் மாடலில் 5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. மற்ற பீச்சர்களை பார்க்கையில், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் சப்போர்ட் கிடைக்கிறது. 8.8 மிமீ தடிமன் மற்றும் 193.3 எடை கொண்டிருக்கிறது.

கனெக்டிவிட்டியை பொறுத்தவரையில், இதில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 4.2 (Bluetooth 4.2) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவை வருகின்றன. இந்த லாவா யுவா ஸ்மார்ட் மாடலின் விலை ரூ.6000 பட்ஜெட்டில் இருக்கிறது. 1 வருட வாரண்டியுடன் கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Yuva Smart With 13MP Camera 5000mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X