அதிர போகுது ஆர்டர்.. 13எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. மலிவு விலையில் லாவா போன் அறிமுகம்.. எந்த மாடல்?
லாவா நிறுவனம் புதிய லாவா யுவா ஸ்மார்ட் 2 (Lava Yuva Smart 2) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் 5000எம்ஏஎச் பேட்டரி, பெரிய டிஸ்பிளே, 13எம்பி கேமரா உள்ளிட்ட அம்சங்களுடன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது. இப்போது புதிய லாவா யுவா ஸ்மார்ட் 2 போனின் விலை மற்றும் அம்சங்கைளப் பார்க்கலாம்.
லாவா யுவா ஸ்மார்ட் 2 அம்சங்கள் (Lava Yuva Smart 2 specifications): 6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது லாவா யுவா ஸ்மார்ட் 2 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 2.5டி கிளாஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆக்டோ-கோர் 28என்எம் யுனிசாக் 9863ஏ பிராசஸர் (Octa-core 28nm UNISOC 9863A processor)உடன் லாவா யுவா ஸ்மார்ட் 2 வெளிவந்துள்ளது. மேலும் பவர்விஆர் ஜிஇ8322ஜிபியு (PowerVR GE8322GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.
3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் லாவா யுவா ஸ்மார்ட் 2 போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்காசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 512ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய லாவா போனில் உள்ளது.
13எம்பி பிரைமரி கேமரா + செகண்டரி ஏஐ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் லாவா யுவா ஸ்மார்ட் 2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது, இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி இந்த லாவா யுவா ஸ்மார்ட் 2 போனில் உள்ளது. அதேபோல் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker), 3.5எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
5000mAh பேட்டரி வசதியுடன் லாவா யுவா ஸ்மார்ட் 2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 4.2இ யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. மேலும் ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் இயங்குதள வசதியுடன் புதிய லாவா யுவா ஸ்மார்ட் 2 போன் வெளிவந்துள்ளது.
லாவா யுவா ஸ்மார்ட் 2 ஸ்மார்ட்போனின் விலை 6,099-ஆக உள்ளது. லாவா ரீடெயில் ஸ்டோர்களில் இந்த போனை வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் கிரிஸ்டல் ப்ளூ மற்றும் கிரிஸ்டல் கோல்ட் நிறங்களில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications